Twitter CEO Parag Agrawal: பரக் அக்ராவல் ஒரு வைரஸ்.. அந்த வைரஸூக்கு மருந்தே கிடையாது - அசால்ட் பதில் தந்த ஆனந்த் மஹிந்திரா
ட்விட்டரின் புதிய சிஇஓ வாக பொறுப்பேற்றிருக்கும் பரக் அக்ராவலை இந்தியன் வைரஸ் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகமே இன்று பயன்படுத்தும் ட்விட்டர் தளத்தின் சிஇஓ வாக இந்தியாவைச் சேர்ந்த பரக் அக்ராவல் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, சுந்தர் பிச்சை, சத்யன் நாதெள்ளா, அரவிந்த் கிருஷ்ணா, சாந்தணு நாராயண் ஆகியோர் உலகின் டாப் தொழில் நுட்ப நிறுவனங்களின் சி இ ஓக்களாக பதவி வகித்து வரும் நிலையில், தற்போது பரக் அக்ராவல் ட்விட்டரின் சிஇஓ வாக மாறியிருப்பது பெருமை கொள்ளும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்ரைப் நிறுவனத்தின் சி இ ஓவும் தனது ட்விட்டர் பக்கத்தில் “ இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபர்கள், உலகின் டாப் தொழில் நுட்ப நிறுவனங்களான கூகுள், மைக்ரோ சாஃப்ட், அடோப், ஐபிஎம் உள்ளிட்டவற்றை தலைமை தாங்குகிறார்கள். தொழில் நுட்ப உலகில் இந்தியர்களின் வியத்தகு வெற்றியை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு அமெரிக்கா வாய்ப்புகளை வழங்குவதையும் இங்கு மறந்து விடக்கூடாது” என்று குறிப்பிட்டார்.
This is one pandemic that we are happy & proud to say originated in India. It’s the Indian CEO Virus… No vaccine against it. 😊 https://t.co/Dl28r7nu0u
— anand mahindra (@anandmahindra) November 29, 2021
இதற்கு பதிலளித்த ஆனந்த் மகேந்திரா, “ இவர் ஒரு தொற்று நோய். இது இந்தியாவில் தோன்றியது என்பதில் நாங்கள் பெருமைகொள்கிறோம். இது இந்திய CEO வைரஸ். இதற்கு எந்த தடுப்பூசியும் கிடையாது” என்று ட்விட் செய்துள்ளார் இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Watch Video : அச்சு அசல் கபில்தேவ்.. மிரட்டும் ரன்வீர்.. அசத்தும் தீபிகா..வெளியானது 83 ட்ரெய்லர்#WatchVideo #83 #Kapildev #DeepikaPadukone #RanveerSinghhttps://t.co/pkoCokc1yn
— ABP Nadu (@abpnadu) November 30, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

