மேலும் அறிய

PAN-Aadhaar Linking: ஆதார் உடன் இணைக்கவில்லையா..! பான் கார்ட் செயலிழந்துவிட்டதா? இப்ப என்ன செய்யனும்?

ஆதார் அட்டையுடன் இணைக்காததால் பான் கார்ட் செயலிழந்து போனால், பயனாளர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஆதார் அட்டையுடன் இணைக்காததால்  பான் கார்ட் செயலிழந்து போனால், பயனாளர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஆதார் - பான் கார்ட் இணைப்பு:

ஆதார் அட்டையுடன் பான் கார்ட் இணைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஏற்கனவே பலமுறை இதற்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்த நிலையில், இந்த முறை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால், ஜுன் 30ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்ட்கள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன.

பாதிப்பு என்ன?

பான் - கார்ட்கள் செயலிழக்க தொடங்கி இருந்தால் அதனால் பாதிக்கப்படுவோர்,  கட்டாய பான் எண் தேவைப்படும் குறிப்பிட்ட சேவைகளை தனிநபர்கள் அணுக முடியாது. அதோடு, தனிநபர் யாரேனும் இதுவரை வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவில்லை என்றால், அவர்கள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்த பின்னரே வருமான வரிக்கணக்கை கூட தாக்கல் செய்ய முடியும். வருமான வரியின் ரிட்டர்ன்ஸை பெற முடியாது. அதிகப்படியான வரிகள் பிடித்தம் செய்யப்படும்.

பான் கார்டை செயல்படுத்துவது எப்படி?

பான் கார்ட் செயலிழப்பால், பாதிக்கப்பட்ட மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாக தொடங்கியுள்ளனர். பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பான எந்த அறிக்கையையும் அரசாங்கம் வெளியிடாத நிலையில், பொதுமக்கள் தங்களது பான் எண்ணை மீண்டும் செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு அறியலாம்.

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியிட்ட அதன் அறிவிப்பில், தனிநபர்கள் தங்கள் பான் செயலிழந்தால் அதனை மீண்டும் எவ்வாறு செயல்படச்செய்வது என்பதற்கான வழிகாட்டுதல்களை தெளிவுபடுத்தியுள்ளது.

ரூ.1000 அபராதம்:

ஆதார் மற்றும் பான் கார்ட் இணைப்பிற்கு ரூ.1000 அபராதம் செலுத்திய பிறகு, உரிய அதிகாரியை சந்தித்து தகவல் தெரிவித்தால் 30 நாட்களுக்குப் பிறகு பயனாளர்களின் பான் - கார்ட் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும்.

அபராதம் செலுத்துவது எப்படி?

  • வருமான வரி ஈ-ஃபைலிங் இணையதளத்திற்குச் சென்று பயனாளர் தங்கள் கணக்கில் லாக்- இன் செய்து உள்நுழையவும்.
  • "Link PAN with Aadhaar" விருப்பத்தைத் தேடி, அதைக் கிளிக் செய்யவும்.
  • படிவத்தில் கேட்கப்படும் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்
  • e-Pay Tax மூலம் பணம் செலுத்தும் செயல்முறையை முடிக்கவும்.  
  • 'PAN/TAN' மற்றும் 'Confirm PAN/TAN' நெடுவரிசைகளின் கீழ் 'PAN' எண்ணை உள்ளிட்டு, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, 'தொடரவும்' பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • 'தொடரவும்' என்பதை அழுத்தி, 2023-24ஐ மதிப்பீட்டு ஆண்டாகவும், மற்ற ரசீதுகளை (500) பேமெண்ட் வகையாகவும் தேர்ந்தெடுக்கவும் 
  • 'others' விருப்பத்திற்கு எதிராகத் தொகை முன்கூட்டியே நிரப்பப்பட்டு இருக்கும். அதனால்,  'தொடரவும்' பொத்தானைக் கிளிக் செய்து பணம் செலுத்தவும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget