மேலும் அறிய
Padma Awards 2023 List: பத்மஸ்ரீ விருதை பெற்ற பாம்பு பிடி வல்லுநர்கள்.. யார் யாருக்கு விருது..? முழு பட்டியல் இதோ!
தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.

விருது வழங்கும் புகைப்படம்
தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர். இருளர் சமுதாயத்தை சேர்ந்த இருவருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
பத்மஸ்ரீ விருதுகள்:
- ராம்சந்த்ரா கர் -(அந்தமான் நிகோபர் தீவில் ஜராவா பழங்குடியின மக்களுக்கு ஆற்றிய மருத்துவ சேவை)
- ஹீராபாய் லோபி -(பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக வாங்கினார்)
- முனீஸ்வர் சந்தர் தவார் -(1971ம் ஆண்டில் போரில் மருத்துவராக பணியாற்றியதுடன் 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தவர்)
- ராம்குவாங்பே நியூமே – (ஹெரேகா சமூக மக்களின் நலனுக்காக போராடிய சமூக ஆர்வலர்)
- அப்புகுட்டன் பொதுவால் – சுதந்திர போராட்ட வீரர் (1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் போராடியவர்)
- சங்குரத்ரி சந்திரா சேகர் – (காகிநாடாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்)
- வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் – தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் ( உலகம் முழுவதும் பல இடங்களில் ஆபத்தான பாம்புகளை பிடித்து அசத்தியுள்ளனர்)
- துலாராம் உப்ரெதி – (98 வயதிலும் இயற்கை விவசாயம்)
- நெக்ராம் ஷர்மா – (பாரம்பரிய முறைப்படி விவசாயம்)
- ஜனும்சிங் சோய் – (ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியின மேதை)
- தனிராம் டோட்டோ – (மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டோட்டோ மொழி ஆய்வாளர்)
- ராமகிருஷ்ணா ரெட்டி – (தெலங்கானாவைச் சேர்ந்த 80 வயது மொழி ஆராய்ச்சியாளர்)
- அஜய்குமார் மாண்டவி – (கோண்ட் பழங்குடியின மரச்சிற்ப கலைஞர்)
- ராணி மாச்செய்யா – (கர்நாடகாவைச் சேர்ந்த 79 வயதான நாட்டுப்புற நடனக்கலைஞர்)
- கே.சி. ரன்ரெம்சங்கி – (மிசோரத்தைச் சேர்ந்த 59 வயதான நாட்டுப்புற கலைஞர்)
- ரைசிங்போர் குர்கலாங் – (மேகலாயாவைச் சேர்ந்த 60 வயதான இசைக்கலைஞர்)
- மங்கல காந்தி ராய் – (மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 102 வயதான இசைக்கலைஞர்)
- மோவ் சுபோங் – (நாகலாந்தைச் சேர்ந்த 61 வயதான நாகா இசைக்கலைஞர்)
- முனிவெங்கடப்பா – (கர்நாடகாவைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞரான 72 வயதான இசைக்கலைஞர்)
- டோமர்சிங் கன்வர் – (சத்தீஸ்கரில் 75 வயதான கலைஞர்)
- பர்சுராம் கோமாஜி குனே – (மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த நாடக கலைஞர்)
- குலாம் முகமது ஜாஸ் – (ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 81 வயதான கைத்தறி கலைஞர்)
- பானுபாய் சித்தாரா – (குஜராத்தைச் சேர்ந்த 66 வயதான ஓவியர்)
- பரேஷ் ராத்வா – (குஜராத்தைச் சேர்ந்த ஓவியர்)
- கபில்தேவ் பிரசாத் – (பீகாரைச் சேர்ந்த 68 வயதான டெக்ஸ்டைல் கலைஞர்)
பத்ம பூஷன் விருதுகள்:
எஸ்.என் | பெயர் | துறை | மாநிலம் / நாடு |
1 | ஸ்ரீ எஸ்.எல் பைரப்பா | இலக்கியம் & கல்வி | கர்நாடகா |
2 | ஸ்ரீ குமார் மங்கலம் பிர்லா | வர்த்தகம் & தொழில் | மகாராஷ்டிரா |
3 | ஸ்ரீ தீபக் தர் | அறிவியல் & பொறியியல் | மகாராஷ்டிரா |
4 | செல்வி வாணி ஜெய்ராம் | கலை | தமிழ்நாடு |
5 | சுவாமி சின்ன ஜீயர் | மற்றவை - ஆன்மீகம் | தெலுங்கானா |
6 | செல்வி சுமன் கல்யாண்பூர் | கலை | மகாராஷ்டிரா |
7 | ஸ்ரீ கபில் கபூர் | இலக்கியம் & கல்வி | டெல்லி |
8 | திருமதி சுதா மூர்த்தி | சமூக பணி | கர்நாடகா |
9 | ஸ்ரீ கமலேஷ் டி படேல் | மற்றவை - ஆன்மீகம் | - |
பத்ம விபூஷன்:
ஜாகீர் உசேன், எஸ்.எம்.கிருஷ்ணா, முலாயம் சிங் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion