P. Chidambaram : திமுகவுக்கு நன்றி.. அடுத்தடுத்து ட்வீட்! வேட்புமனு தாக்கலுக்கு நேரம் குறித்த ப.சிதம்பரம்!
டெல்லியில் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலை அடுத்து நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்த ப.சிதம்பரம், சென்னையில் உள்ள தனது வீட்டில் 10 எம்.எல்.ஏக்களின் கையெழுத்தோடு வேட்புமனுவை தயார் செய்தார்
ப.சிதம்பரம்
தமிழ்நாட்டிலுள்ள 6 மாநிலங்களவை இடத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3ல் திமுக கட்சி போட்டியிடுகிறது. திமுக தன்னுடைய கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த இடத்திற்கான வேட்பாளர் யார் என்பதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. டெல்லியில் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலை அடுத்து நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்த ப.சிதம்பரம், சென்னையில் உள்ள தனது வீட்டில் 10 எம்.எல்.ஏக்களின் கையெழுத்தோடு வேட்புமனுவை தயார் செய்தார்
வேட்புமனுத் தாக்கல்
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழ்நாட்டில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நாளை கடைசி நாள் என்பதால் இன்று தன்னுடைய வேட்புமனுவை ப.சிதம்பரம் தாக்கல் செய்யவுள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள ப.சிதம்பரம், ''மாநிலங்களைவை தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன்.
காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் தலைமை, மில்லியன் கணக்கான காங்கிரஸ் உறுப்பினர்கள், சகாக்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளார்
I will file my nomination at 12 noon today as a Congress candidate for the biennial election to the Rajya Sabha from Tamil Nadu
— P. Chidambaram (@PChidambaram_IN) May 30, 2022
Grateful for the support and good wishes of the Congress President, the Congress leadership, millions of Congress members, colleagues and friends
மேலும் தமிழில் ட்வீட் செய்துள்ள ப.சிதம்பரம், ‘’எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி மு கழகம், அதன் தலைவர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி மு கழகம், அதன் தலைவர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி!
— P. Chidambaram (@PChidambaram_IN) May 30, 2022
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க
தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார் மற்றும் கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் சி.வி. சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது விசா முறைகேடு வழக்கு நடைபெற்று வருவதும், அவர் தற்போது டெல்லியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலங்களுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வரும் ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்