மேலும் அறிய

Manipur Violence: மணிப்பூர் விவகாரத்தால் பிரதமருக்கு வந்த நெருக்கடி.. சிறப்பான சம்பவத்தை செய்ய காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்!

மணிப்பூர் தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தை புரட்டி போட்ட மணிப்பூர் விவகாரம்:

மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம், நாடாளுமன்றத்தையே புரட்டிபோட்டது.

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கொடூரத்தை விவாதிக்க வேண்டும் என மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நேற்று முதலில் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர், ஜூலை 24ஆம் தேதி காலை 11 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாநிலங்களவையும் வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி, பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சிறப்பான சம்பவத்தை செய்ய காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்:

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள இந்தியா (எதிர்க்கட்சி கூட்டணி) கூட்டணி கட்சி தலைவர்கள், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் கூடி, நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து விவாதிக்க உள்ளனர். திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கூட்டம் முடிந்ததும், நாடாளுமன்ற அவைக்குள் நுழைவதற்கு முன்பு காந்தி சிலை அருகே எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

மணிப்பூர் பிரச்னை குறித்து குறுகிய விவாதம் நடத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அதற்கு, உள்துறை அமைச்சர் பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமரே விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. அதேபோல, நேரக்கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து கட்சிகளையும் பேச அனுமதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கோரிக்கை விடுத்து வருகிறது. 

மேலும் வியாழக்கிழமை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

எதிர்க்கட்சியினரின் அமளிக்கு மத்தியில் நேற்று மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "மணிப்பூரில் நடந்தது மிக மோசமான சம்பவம். இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். மணிப்பூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். இதை அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் நான் கூறியிருந்தேன். மணிப்பூர் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஆனால், ஒரு சில அரசியல் கட்சிகள் தேவையில்லாமல், மணிப்பூர் பற்றிய விவாதத்தை நடத்த விடாத சூழ்நிலையை உருவாக்க விரும்புவதை நான் காண்கிறேன். மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இருந்திருக்க வேண்டிய தீவிரம் அவர்களிடம் இல்லை என்று நான் தெளிவாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget