Bill Gates: ஒரு சாயா போடுங்க: இந்தியாவின் புதுமையில் ‘டீ’ -யை ரசித்த பில்கேட்ஸ் - வீடியோ வைரல்
Bill Gates: பில் கேட்ஸ் டோலி சாய்வாலா-வின் சாலையோர கடையில் டீ அருந்திய வீடியோ வைரலாகி வருகிறது.
![Bill Gates: ஒரு சாயா போடுங்க: இந்தியாவின் புதுமையில் ‘டீ’ -யை ரசித்த பில்கேட்ஸ் - வீடியோ வைரல் One Chai, Please Bill Gates Enjoys Tea Made By Dolly Chaiwala Bill Gates: ஒரு சாயா போடுங்க: இந்தியாவின் புதுமையில் ‘டீ’ -யை ரசித்த பில்கேட்ஸ் - வீடியோ வைரல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/29/3abfcef1c0ae11153c5970985df46cff1709189583382333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா வந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், தேநீர் கடை உரிமையாளருடனான உரையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முகேஷ் அம்பானியில் இளைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்செண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சி குஜராத்தில் நாளை (01.03.2024) தொடங்குகிறது. இதில் பங்கேற்பதாக இந்தியா வந்துள்ளார் பில் கேட்ஸ்.
ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கையும் சந்தித்து உரையாடினார். இந்நிலையில், மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் நகரில் சாலையோர டீ கடையில் பில்கேட்ஸ் “ஒரு டீ ப்ளீஸ்” என்று கேட்டு டீ குடித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில், ‘ஒரு சாய் ப்ளீஸ்’ என்று கேட்கிறார். அவரின் தனித்துவமான டீ தயாரிக்கும் முறை ரசித்தவாறே.. அவருடன் உரையாடலுன் டீ பருகும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பில் கேட்ஸ் அவரது சமூக வலைதள பக்கத்தில்,” இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமையை காணலாம். அதில் தேநீர் தயாரிப்பும் அடங்கும்’ என குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
டோலி சாய்வாலா உடனான வீடியோவை பகிர்ந்துள்ளார். ‘ஒரு டீ’ என பில் கேட்ஸ் சொல்ல இந்த வீடியோ தொடங்குகிறது. தொடர்ந்து டோலி சாய்வாலா தனது ஸ்டைலில் தேநீர் தயாரித்து கொடுக்க, அதை பில் கேட்ஸ் பருகுகிறார். இந்த வீடியோ சுமார் 4 லட்சம் பார்வைகளை நெருங்கி உள்ளது.
நாக்பூரின் சதர் பகுதியில் சாலையோரத்தில் டீ கடை வைத்திருப்பவரும் சமூக வலைதளத்தில் பிரபலமானவர். ‘டோலி சாய்வாலா’ என்ற பெயரால் அறியப்படுகிறார். இவரது டீ தயாரிப்பு மிகவும் ஸ்டைலாக இருக்கும். பலருக்கும் இவர் கடையின் டீ என்றால் ஃபேவரைட். அவரது டீ-யை பில்கேட்ஸ் ருசித்துள்ளார். இந்த வீடியோ 15 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரல் ஆகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)