மேலும் அறிய

ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!

சென்னை - திருவனந்தபுரம் இடையேயான சாதாரண விமானக் கட்டணம் ரூ.5,853 ஆக உள்ள நிலையில், தற்போதைய பயணிகள் நெருக்கடியால் இதன் கட்டணம் ரூ.14,700 ஆக உச்சத்தை தொட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, விமானம் மூலம் அதிக அளவில் மக்கள் கேரளா செல்வதால் கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.கேரளம் மாநிலத்தில் 10 நாட்கள் ஓணம் பண்டிகை கடந்த 16-ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முக்கிய நாளான திருவோணம் ஆக.26-ல் கொண்டாடப்படுகிறது.  கேரளாவின் பாரம்பரிய மற்றும் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வாழும்  கேரள  மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர். 

ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!

இதன் காரணமாகத் தென் மாநிலங்களில் இருந்து கேரளா செல்லும் ரயில், பேருந்து மற்றும் விமான போக்குவரத்துச் சேவைகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதால், கடைசி நேரப் பயணத்திற்கு மக்கள் பெருமளவில் விமான சேவையை நாடத் தொடங்கியுள்ளனர்.

இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னையில் இருந்து கேரளாவின் முக்கிய நகரங்களான கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் விமானங்களின்  வழக்கமாக சென்னை - கொச்சி இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் சராசரியாக ரூ.5,336 ஆக இருக்கும் நிலையில், ஓணம் பண்டிகை நெருங்கியதை ஒட்டி தற்சமயம் ஒரே நாளில் ரூ.14,843 வரை உயர்ந்துள்ளது.

ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!

அதேபோல், சென்னை - திருவனந்தபுரம் இடையேயான சாதாரண விமானக் கட்டணம் ரூ.5,853 ஆக உள்ள நிலையில், தற்போதைய பயணிகள் நெருக்கடியால் இதன் கட்டணம் ரூ.14,700 ஆக உச்சத்தை தொட்டுள்ளது. திடீரென விமானக் கட்டணம் 2 முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்ட பயணிகள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். கட்டண உயர்வு அதிகமாக இருந்தாலும், குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாட வேறு வழியின்றி கூடுதல் தொகையைக் கொடுத்துப் பயணிப்பதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற செயற்கையான கட்டண உயர்வுகளைக் கட்டுப்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும், மாநில அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.

விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், ஓணம் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து கேரளம் மாநிலத்துக்கு கூடுதல் - விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று கேரளம் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!
ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!
ஆதார் அப்டேட்: பெயர், பிறந்த தேதி மாற்ற UIDAI விதித்த வரம்புகள்! முழு விவரம் இதோ..
ஆதார் அப்டேட்: பெயர், பிறந்த தேதி மாற்ற UIDAI விதித்த வரம்புகள்! முழு விவரம் இதோ..
மெட்ரோ நிலையத்தில் பூனைக்கு வேலை.. தலைமை அதிகாரியாக நியமனம்!
மெட்ரோ நிலையத்தில் பூனைக்கு வேலை.. தலைமை அதிகாரியாக நியமனம்!
5 ஆண்டுகளில் ரூ.4.20 லட்சம்... போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் முழு கணக்கு!
5 ஆண்டுகளில் ரூ.4.20 லட்சம்... போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் முழு கணக்கு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget