மேலும் அறிய

Odisha Train Accident LIVE: சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை!

Odisha Train Accident LIVE: சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து, மீட்பு பணிகள் குறித்த லைவ் செய்திகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.

LIVE

Key Events
Odisha Train Accident LIVE: சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை!

Background

Coromandel Express Accident LIVE:

ஒடிசாவில் பயங்கர ரயில் விபத்து(Odisha Train Accident) ஏற்பட்டுள்ளது. பாலசோர் நகரில் உள்ள பஹானாகா ரயில் நிலையத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில்(Coromandel Express Accident) சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ்:

சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டுள்ளது. இன்று மதியம் 3:20 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து இந்த ரயில் கிளம்பியுள்ளது. அவசர உதவிக்கு 6782262286 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஷாலிமார்-கோரோமண்டல் விரைவு ரயில் இன்று மாலை பாலசோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இதில், வெளியூர் சென்ற மக்கள் கடுமையாகப் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

 

அவசர உதவி எண் அறிவிப்பு:

எங்கள் மக்களின் நலனுக்காக ஒடிசா அரசு மற்றும் தென்கிழக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைத்து வருகிறோம். எங்களின் அவசரகால கட்டுப்பாட்டு அறை 033- 22143526/ 22535185 என்ற எண்களுடன் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. உதவிக்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

ஒடிசா அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் 5-6 பேர் கொண்ட குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்புகிறோம். தலைமைச் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

விபத்தில் படுகாயம் அடைந்த 132 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) மற்றும் மூத்த அதிகாரிகள் ஹேமந்த் சர்மா, பல்வந்த் சிங், அரவிந்த் அகர்வால், டிஜி தீயணைப்பு சேவைகள் ஆகியோர் ரயில் விபத்து ஏற்பாடுகளை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.
 
ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா  முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சென்னைக்கான அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.  044- 25330952, 044-25330953, 044-25354771 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், 2009ஆம் ஆண்டிலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. அதில், 161 பேர் படுகாயமடைந்த நிலையில், 16 பேர் உயிரிழந்தனர்.
 
21:36 PM (IST)  •  04 Jun 2023

Odisha Train Accident LIVE: ரயில்வே வாரியம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை!

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. 

21:32 PM (IST)  •  04 Jun 2023

Odisha Train Accident LIVE: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழக்கவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இருந்து யாரும் பாதிக்கப்படவில்லை என ஒடிஷா சென்று திரும்பியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “விரைவில் நல்ல செய்தி வரும். நாங்கள் மருத்துவமனை, சவக்கிடங்கு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ததில் தமிழர்கள் எவரும் இல்லை. அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபோதும் தமிழர்கள் அனுமதிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

17:58 PM (IST)  •  04 Jun 2023

ஒடிஷா ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலகவேண்டும் - ராகுல் காந்தி

ஒடிஷா ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலகவேண்டும் - ராகுல் காந்தி

15:02 PM (IST)  •  04 Jun 2023

ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் 128 கிமீ வேகத்தில் சென்றுள்ளது - அதிகாரி

ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் 128 கிமீ வேகத்தில் சென்றுள்ளது - அதிகாரி

11:59 AM (IST)  •  04 Jun 2023

ஒடிசா ரயில் விபத்து - உச்சநீதிமன்றத்தில் மனு

ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் “ரயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி  தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிடவும், ரயில் பயணங்களை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் உரிய ஆலோசனை வழங்கும் வகையில் ஆணையம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்” எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget