மேலும் அறிய

Coromandel Express Accident: சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து...அவசர உதவி எண் அறிவிப்பு..!

Coromandel Express Accident: அவசர உதவிக்கு 06782262286 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Coromandel Express Accident: சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொல்கத்தாவில் இருந்து இன்று மதியம் 3:20 மணிக்கு கிளம்பிய ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சரக்கு ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

பாலசோர் நகரில் உள்ள பஹானாகா ரயில் நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அவசர உதவிக்கு 06782262286 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஷாலிமார்-கோரோமண்டல் விரைவு ரயில் இன்று மாலை பாலசோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இதில், வெளியூர் சென்ற மக்கள் கடுமையாகப் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

அவசர உதவி எண் அறிவிப்பு:

எங்கள் மக்களின் நலனுக்காக ஒடிசா அரசு மற்றும் தென்கிழக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைத்து வருகிறோம். எங்களின் அவசரகால கட்டுப்பாட்டு அறை 033- 22143526/ 22535185 என்ற எண்களுடன் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. உதவிக்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

ஒடிசா அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் 5-6 பேர் கொண்ட குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்புகிறோம். தலைமைச் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

விபத்தில் படுகாயம் அடைந்த 132 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) மற்றும் மூத்த அதிகாரிகள் ஹேமந்த் சர்மா, பல்வந்த் சிங், அரவிந்த் அகர்வால், டிஜி தீயணைப்பு சேவைகள் ஆகியோர் ரயில் விபத்து ஏற்பாடுகளை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.
 
ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா  முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சென்னைக்கான அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.  044- 25330952, 044-25330953, 044-25354771 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்த ரயிலில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.  இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது. 179 பேர், படுகாயம் அடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். துக்கமான இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget