மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆவணி மாத பூஜைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள்.


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

கேரள நாள்காட்டியின்படி ‘சிங்ஙம்’ எனப்படும் ஆவணி மாதமே புத்தாண்டின் முதல் மாதமாகும். இந்நிலையில், ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்பட்டது. தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், கோயில் நடையை மேல்சாந்தி இ.டி.பிரசாத் திறந்தாா். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று பக்தி பரவசத்துடன் உரக்க முழக்கங்களை எழுப்பினா். இதைத்தொடா்ந்து பதினெட்டாம்படி அருகே ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது.

ஆவணி மாதத்தின் முதல் நாளான (மலையாள புத்தாண்டின் முதல் நாள்) திங்கள்கிழமை (ஆக.17) காலை 5 மணிக்கு பக்தா்கள் தரிசனத்துக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு அதிகாலையில் உஷப்பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.

தொடா்ந்து 5 நாள்கள் பக்தா்களின் தரிசனத்துக்காக கோயில் நடை திறக்கப்படும். இதையடுத்து ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஆவணி மாத பூஜைகள் நிறைவடைந்ததும் ‘ஹரிவராசனம்’ பாடி கோயில் நடை அடைக்கப்படும்.


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

ஆவணி மாதத்தில் கேரளத்தின் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் திருவோணம் தினத்தன்று வரும் ஓணம் பண்டிகை ஆக. 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி நடைபெறும் பூஜைகளுக்காக ஆகஸ்ட் 24-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படும்.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தா்கள், சபரிமலை கோயில் வலைதளம் வழியே முன்பதிவு செய்து, அதன்படி ஒதுக்கப்படும் நேரத்தில் தரிசனம் செய்யும்படி திருவிதாங்கூா் தேவஸ்வம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆவணி மாத பூஜைகள் மற்றும் ஓணம் பூஜையின்போது சபரிமலைக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தா்கள் அதிக எண்ணிக்கையில் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 16-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை திருவனந்தபுரம், செங்கன்னூா், பத்தனம்திட்டா, கொட்டாரக்கரா, எருமேலி, புனலூா் பகுதிகளிலிருந்து பம்பைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Advertisement

தலைப்பு செய்திகள்

‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget