மேலும் அறிய

Odisha Train Accident: பிரதமர் சொல்லும் வரை காத்திருக்க வேண்டாம் மினிஸ்டர்.. நீங்களாகவே பதவி விலகி விடுங்கள் - சுப்பிரமணிய சுவாமி ட்வீட்..!

Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்துக்கு முழுப்பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவி விலகவேண்டும் என பாஜக உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளார்.

 Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்துக்கு முழுப்பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவி விலகவேண்டும் என பாஜக உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான  சுப்பிரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளார். 

கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் அதாவது ஜூன் 2ஆம் தேதி சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மோசமான ரயில் விபத்து:

அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒடிஷாவில் நேற்று அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதேபோல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இப்போது தான் நமக்கு தெரியவருகிறது வேகமாக சென்ற ரயில் அந்த தண்டவாளத்தில் செல்ல வேண்டிய ரயிலே இல்லை. மேலும், அந்த தண்டவாளம் மெதுவாக செல்லக்கூடிய ரயில்களுக்கானது. இந்த விபத்துக்குப் பின்னரும் பிரதமர் சொன்னால் தான் பதவி விலகுவேன் என ரயில்வே அமைச்சர் இருக்கக்கூடாது. தானாகவே பதவி விலகவேண்டும். 

பிரதமர் சொல்லும் வரை காத்திருக்காமல் நீங்களாகவே ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி திறமையான அல்லது திறமையற்ற அல்லது பொறுத்தமற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் உலகிலேயே அவர் தான் தலைசிறந்தவர்.  அதற்கு அவர் விலையும் பெறுகிறார்” என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget