National Headlines: விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம் முதல் விஷால் புகார் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்
இந்தியாவில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
2000 Rupee Note: உங்களிடம் 2000 ரூபாய் நோட் உள்ளதா? உடனே மாத்துங்க.. நாளை தான் கடைசி நாள்..
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு 2016 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், 1000 ரூபாய்க்கு பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்த நிலையில், மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் படிக்க,
Karnataka Bandh: காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்: 430 தமிழக பேருந்துகள் நிறுத்தம்..
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இருக்கும் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தண்ணீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடகா அரசு தரப்பில் தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின் படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் செப்டம்பர் 26-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் மேலும் படிக்க,
பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா: வழங்கப்பட்ட பட்டியலினப் பிரிவு செயலாளர் பதவி!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா (34). இவர் மீது பீர்க்கன்கரணை, ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கு விஜயலட்சுமி (32) என்ற மனைவி மற்றும் கோகுல் என்ற மகன், யுவஸ்ரீ என்ற மகள் உள்ளனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலின்பொழுது வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட விஜயலட்சுமி, சிறையில் இருந்தபடியே துணை தலைவராக வெற்றி பெற்றார். அதன் பிறகு பாஜகவில் அவருக்கு மகளிர் அணியில் மேலும் படிக்க,
பாஜகவுடன் கூட்டணி.. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் வரிசையில் இரண்டாக உடையும் தேவகவுடா கட்சி
பாஜகவும், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. தேவகவுடாவின் மகனும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எச்.டி. குமாரசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவையும் சந்தித்து பேசினார். பாஜகவுடன் கூட்டணி வைத்தது அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்தை மேலும் படிக்க,
Actor Vishal: நடிகர் விஷால் அளித்த புகார்! - சிக்கலில் தணிக்கை வாரியம்! மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி
மார்க் ஆண்டனி படம் இந்தி வெளியீட்டிற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டிய நிலையில் அதுகுறித்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் “மார்க் ஆண்டனி”. விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். போன் மூலம் டைம் டிராவல் என்ற விஷயத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட மேலும் படிக்க,