மேலும் அறிய

2000 Rupee Note: உங்களிடம் 2000 ரூபாய் நோட் உள்ளதா? உடனே மாத்துங்க.. இன்று தான் கடைசி நாள்..

புழகத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று தான் கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு 2016  ஆம் ஆண்டு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், 1000 ரூபாய்க்கு பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. 

இந்த நிலையில், மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை பெருவாரியாக மத்திய அரசு நிறுத்திவிட்டதாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி நிலவரப்படி, இதுவரை 3.32 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது. 2000 ரூபாய் நோட்டை வேறு நோட்டுகளாக மாற்றுவதில், தொடக்கத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மே 23, 2023 முதல், ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் தனிநபர்கள் 2000 ரூபாய் நோட்டை மற்ற பணத்துடன் மாற்றிக்கொள்ளலாம்.

இந்த நோட்டுகளை மாற்ற 20 ஆயிரம் ரூபாய் வரை வரம்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒருவர், ஒரு நாளைக்கு, 10 நோட்டுகள் வரை மாற்றிக்கொள்ளலாம். மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, கட்டுப்பாடுகளுடன், எந்த ஆவணங்களும் தேவையில்லை. அதாவது, 20 ஆயிரம் ரூபாய் வரையில் எந்தவித ஆவணங்களும் இன்றி, பயனாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் உண்டியல்களில் அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கும் என்பதால் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் உண்டியலில் இருக்கும் காணிக்கையை எண்ணி அதில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மற்ற வங்கிகளை அனுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பழனி கோயிலில் இருக்கும் உண்டியலில் பணம் எண்ணியதில் 5 கோடி இருந்துள்ளதாகவும், அதனை மாற்றும் பணிகளில் கோயில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் கெடு முடிவதால் பெட்ரோல் பங்கில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கும் பணிகள் முற்றிலுமாக நின்றுவிட்டதாக பெட்ரோல் பங் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும் போது, போதிய அவகாசத்தை மத்திய அரசு வழங்கியுள்ளதால் அனைவரும் தங்களிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றிவிட்டதாகவும் தற்போது டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்குவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  இன்று காலக்கெடு முடிவடையும் நிலையில் இந்த அவகாசம் நீடிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.  

Karnataka Bandh: காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்: 430 தமிழக பேருந்துகள் நிறுத்தம்..

Siddharth: காவிரி விவகாரம்.. சித்தார்த்திடம் பிரச்னை செய்த கன்னட அமைப்பினர்.. மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்..!

 

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget