மேலும் அறிய

நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையேயான உறவு பாலியல் வன்கொடுமை ஆகாது: டெல்லி உயர்நீதிமன்றம்

ஒரு ஆணும் பெண்ணும் நீண்டகாலமாக உறவில் இருந்து, நிச்சயம் செய்து கொண்ட ஒரு விஷயம் தொடர்பான வழக்கை விசாரிக்கும்போது உயர் நீதிமன்றம் இவ்வாறான கருத்தைக் கூறியது

திருமண வாக்குறுதி உண்மையாக இருந்தாலும் வெளிப்புற சூழ்நிலைகளால் ஒரு திருமணம் கைகூடாமல் போகும் நிலையில்  அதன் காரணமாக நிகழ்ந்த பாலியல் உறவு பாலியல் வன்முறையாகக் கருதப்படாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு ஆணும் பெண்ணும் நீண்டகாலமாக உறவில் இருந்து, நிச்சயம் செய்து கொண்ட ஒரு விஷயம் தொடர்பான வழக்கை விசாரிக்கும்போது உயர் நீதிமன்றம் இவ்வாறான கருத்தைக் கூறியது. காதல் முறிவு ஏற்பட்டதால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறாமல், விரோதப் போக்கில் இந்த உறவு முடிந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணிய பிரசாத், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376(2)(n)ன் கீழ், திருமணத்தின் பெயரால் பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை அவர் ரத்து செய்தார்.

அரசுத்தரப்பு வழக்கறிஞரின் கூற்றுப்படி, மணப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு தனது பெற்றோரை சமாதானப்படுத்த மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டார், இதற்கிடையே உடலுறவை பாலியல் ரீதியான துன்புறுத்தல் என வழக்கறிஞர் கூறுவதை ஏற்க முடியாது என அவர் கூறியுள்ளார். 

"இருவருக்கும் இடையே ஒரு நிச்சயதார்த்த விழா நடந்தது, அதில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், மணமகன் உண்மையில் மனுதாரரைத் திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் விரோதப் போக்கில் அந்த உறவு முடிவுக்கு வந்ததால், மணமகளை முதலில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் மனுதாரருக்கு இல்லை என்று கூற முடியாது. இதனைத் தவறாகப் புரிந்துகொண்டு, உடல் உறவின் அடிப்படையில் வழக்கின் போக்கை நிறுவுவதற்கு வழக்குரைஞர் வழங்கிய ஒப்புதல் தவறானது”என்று நீதிமன்றம் தனது சமீபத்திய உத்தரவில் கூறியுள்ளது.

மனுதாரர் பதர் மஹ்மூத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இட்டுக்கட்டப்பட்டவை என்றும், மனுதாரர் மனமகளை காதலிப்பதாகவும், அவருடன் சமரசம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

இதை அடுத்து, "திருமணத்தின் வாக்குறுதி உண்மையானது மற்றும் வெளிப்புற சூழ்நிலைகளால் திருமணம் தோல்வியுற்றது என்று கண்டறியப்பட்டால், அந்த வாக்குறுதி பொய்யானது என்று கூற முடியாது, மேலும் IPC 90வது பிரிவின்படி திருமணத்துக்கான சம்மதம் மீறப்படவில்லை" என்று நீதிமன்றம் கூறியது.

"எனவே, பாலியல் உறவுகள் கட்டாயப்படுத்தப்பட்டன என்ற முடிவுக்கு வருவதற்கு, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கும் கட்டத்தில், அது வாக்குறுதியைக் காப்பாற்றாத நோக்கத்துடன் செய்யப்பட்டதா, அதனால் அது பொய்யானதா என்பதை ஆராய வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, விசாரணை நீதிமன்றம் "ஆதாரங்களைத் துண்டிக்காமல் அல்லது எடைபோடாமல்" குற்றச்சாட்டின் மீது நேரடியாக உத்தரவு வழங்கியதாகவும், "தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது" என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை உருவாக்கும் உத்தரவை ரத்து செய்ததாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget