மேலும் அறிய

CHINA: இது அவர்களுக்கு வேண்டாத வேலை.. சீனாவை கண்டிக்கும் அமெரிக்கா

இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டுப்பயிற்சி தொடர்பாக பேசுவது என்பது, சீனாவிற்கு வேண்டாத வேலை என அமெரிக்கா கடுமையாக சாடியுள்ளது.

சீனாவிற்கு அமெரிக்கா பதிலடி:

இந்தியாவிற்காக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மிகுந்த திறன்மிக்க நாடாக வளரவேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிகளை ஆதரிப்பதில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவதாக கூறினார். மிகவும் முக்கியமான பாதைகளில் இந்தியாவின் திறன் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தியா உடனான உறவு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய விவகாரங்களில், இருநாடுகளும் இயற்கையாகவே நண்பர்களாக இருப்பதாகவும் கூறினார்.  அமெரிக்கா - இந்தியா கூட்டு பயிற்சி தொடர்பாக சீனாவின் குற்றச்சாட்டிற்கு இந்தியாவின் பதிலை  தான் வரவேற்பதாகவும், சீனாவிற்கு இது வேண்டாத வேலை எனவும்  எலிசபெத் ஜோன்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா கூட்டுப்பயிற்சி:

இந்தியா மற்றும் அமெரிக்காவின் 18-வது கூட்டு ராணுவ பயிற்சியான யுத் அப்யாஸ் 2022 என்ற பெயரில் நடைபெறுகிறது. அமெரிக்க ராணுவத்தின் 11-வது வான்படை பிரிவை சேர்ந்த வீரர்களும், இந்திய ராணுவத்தின் அசாம் படை பிரிவினரும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். உத்தரகாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்தும் இந்த கூட்டு ராணுவ பயிற்சிக்கான முகாமானது,  சீன எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பயிற்சியின்போது,  ரஷ்யாவை சேர்ந்த மி-17வி5 ரக ஹெலிகாப்டரில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து, மிக அதிக உயரத்தில் பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கூட்டுப்பயிற்சியின் நோக்கம்:

இந்த கூட்டு பயிற்சியின்போது மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும். இயற்கை சீற்றத்தின் போது, நிவாரண நடவடிக்கைகளை விரைவாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படுத்துவதற்கான பயிற்சியை இரு நாடுகளும் பெறவுள்ளன. 

சீனா குற்றச்சாட்டு:

இந்தியா, அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிக்கு சீனா அண்மையில்  தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. அசல் எல்லை கோட்டுக்கு அருகே நடந்து வரும் இந்த போர் பயிற்சியானது, இந்தியா மற்றும் சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தங்களை மீறும் வகையில் உள்ளது.  சீனா மற்றும் இந்தியா இடையே கடந்த 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறும் வகையில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான கூட்டுப்பயிற்சி நடைபெற்று வருவதாகவும் சீனா குற்றம்சாட்டியது. 

சீனாவிற்கு இந்தியா பதிலடி:

சீனாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை, அமெரிக்காவுடன் ஆலி பகுதியில் நடந்து வரும் போர் பயிற்சிகளுக்கும், சீனா மற்றும் இந்தியா இடையே கடந்த 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இந்த ஒப்பந்தங்களை போட்டு விட்டு அவர்களே விதிமீறிய விசயங்களை சீன தரப்பு நினைத்து பார்க்க வேண்டும். யாருடன் பயிற்சி செய்ய வேண்டும் என்பது பற்றி இந்தியா தேர்வு செய்து கொள்ளும். இந்த விவகாரத்தில் இந்தியா, மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் எதுவும் அளிக்கவில்லை என பதிலளித்து இருந்தது. இந்தியாவின் இந்த கருத்தை வழிமொழிவதாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget