மேலும் அறிய

ஆதார் கார்டில் Email ID அப்டேட் செய்ய இனி கட்டணம் இல்லை.. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு!

உங்களுடைய மெயில் ஐடியை இதுவரையில் ஆதார் கார்டில் அப்டேட் செய்யவில்லை என்றால் ஜூலை 1-ம் தேதி முதல் அப்டேட் செய்யலாம்.

அரசு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, தனியார் சேவைகளை பெறுவதற்கு என அனைத்திற்கும் ஆதார் கார்டு முதன்மை வகிக்கிறது, குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது கூட ஆதார் கார்டைத் தான் முதலில் கேட்பார்கள். இப்படி முக்கியமாக இருக்கும் ஆதார் கார்டு விவரங்களை துல்லியமாக வைத்திருப்பது அவசியமாகும். அதேபோல ஆதார் விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதை உடனடியாக  அப்டேட் செய்ய வேண்டும். தற்போது UIDAI அதற்கு ஏதுவாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.


ஆதார் கார்டில் Email ID அப்டேட் செய்ய இனி கட்டணம் இல்லை.. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் ஜூன் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை உங்களுடைய ஈமெயில் ஐடியை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தற்போது வரை இந்த சேவைக்கு 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இனி வரவிருக்கும் ஜூலை மாதம் முதல் தொடர்ந்து 6 மாதங்களுக்கு கட்டணம் கிடையாது. ஆதார் வைத்திருப்பவர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்க இதுவரையில் செலுத்தி வந்த ரூ.75 கட்டணத்தை இனி செலுத்த தேவையில்லை.

ஆதார் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவே இலவசமாக இந்த சேவையைப் பெறலாம். ஆனால் நீங்கள் ஆதார் மொபைல் ஆப் மூலமாக அப்டேட் செய்தால் மட்டுமே கட்டணம் இலவசம். பிற வழிகளில் அப்டேட் செய்தால் வழக்கம்போல கட்டணம் செலுத்த வேண்டும். UIDAI இணையதளத்தில் புதுப்பித்தால் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆதாருடன் ஈ-மெயில் ஐடியை இணைப்பதில் சில நன்மைகள் இருக்கிறது. உங்களுடைய ஈமெயிலுக்கு ஆதார் தொடர்பான அறிவிப்புகள் அனுப்பப்படும் மற்றும் தகவல்கள் உங்களை உடனடியாக வந்தடையும். இதன் மற்றொரு முக்கிய நன்மை என்னவென்றால் ஆதாரைப் பயன்படுத்தி ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பயன்பாடு இருப்பதாகத் தெரிய வந்தால் அது குறித்த அறிவிப்புகளை நீங்கள் உடனடியாகப் பெற முடியும்.ஆதார் கார்டில் Email ID அப்டேட் செய்ய இனி கட்டணம் இல்லை.. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு!

இந்த வசதி குறிப்பாக தற்போதைய சூழலுக்கு மிகவும் அவசியம். ஏனெனில் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அடையாள மோசடியால் பலர் லட்சக்கணக்கில் இழந்து வருகின்றனர். உங்களுடைய ஆதார் கார்டை உங்களுக்கே தெரியாமல் பயன்படுத்தி மோசடி செய்வதை நீங்கள் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். எப்படி OTP சரிபார்ப்புக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வருகிறதோ? அதேபோல மெயில் சரிபார்ப்பு செய்ய முடியும். இது போன்ற சேவை உங்களுக்கு பல இடங்களில் தேவைப்படும்.

நீங்களும் உங்களுடைய மெயில் ஐடியை இதுவரையில் ஆதார் கார்டில் அப்டேட் செய்யவில்லை என்றால் ஜூலை 1-ம் தேதி முதல் அப்டேட் செய்யலாம். இதை செய்வதற்கு நீங்கள் UIDAI இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் "மை ஆதார்" என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.

அங்கு "வெரிஃபை ஈமெயில் ஆர் மொபைல் நம்பர்" என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் வெரிஃபை ஈமெயில் அட்ரஸ் என்பதை தேர்வு செய்து உங்களுடைய ஆதார் நம்பர், மெயில் முகவரி, கேப்சா குறியீடு ஆகியவற்றை வழங்கி சப்மிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். தற்போது உங்களுடைய மெயில் முகவரிக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி-ஐ வழங்கி சப்மிட் செய்தால் போதும். இப்படி செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் "ஆதார் ஆதன்டிகேஷன் சக்ஸஸ்ஃபுல்" என்று கொடுக்கப்பட்டிருக்கும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget