மேலும் அறிய

"லவ் ஜிகாத் என்ற வார்த்தையே தவறு": விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை! ஜகா வாங்கிய DYFI!

யோஷ்னாவை லவ் ஜீகாத் எனப்படும் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு ஷஜீன் திருமணம் செய்துகொண்டதாக யோஷ்னாவின் பெற்றோரும், உறவினர்களும் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

கோழிக்கோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலக உறுப்பினரும், இரண்டு முறை எம்.எல்.ஏ.வுமான தாமஸ், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டி.ஒய்.எஃப்.ஐ.) தலைவர் எம்.எஸ். ஷெஜின், ஜோய்ஸ்னா எனும் கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்துகொண்டது கோடஞ்சேரி பகுதியில் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக குற்றம் சாட்டினார். ஷெஜின் முஸ்லீம் மற்றும் ஜோய்ஸ்னா கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்தவர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, கட்சியின் இளைஞர் பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் மதச்சார்பற்ற திருமணங்களுக்கு கட்சியின் ஆதரவை மீண்டும் தீர்க்கமாக வலியுறுத்தியது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் பெண் நிர்வாகி ஜோத்ஸ்னா மேரி ஜோசப், சவுதி அரேபியாவில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இவர், சமீபத்தில் டி.ஒய்.எப்.ஐ., எனப்படும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உள்ளூர் நிர்வாகியான ஷெஜின் என்ற இஸ்லாமிய இளைஞரை, பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்தார். கிருஸ்தவம் - இஸ்லாம் மதங்களை சேர்ந்த இருவரும் கலப்புத்திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில் இந்த திருமணத்திற்கு யோஷ்னாவின் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. தனது மகளை காணவில்லை என யோஷ்னாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், ஷஜீன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் யோஷ்னாவின் பெற்றோர், உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். 

அதேபோல், யோஷ்னாவை லவ் ஜீகாத் எனப்படும் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு ஷஜீன் திருமணம் செய்துகொண்டதாக யோஷ்னாவின் பெற்றோரும், உறவினர்களும் குற்றஞ்சாட்டி இருந்தனர். அதேவேளை, தனது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே ஷஜீனை திருமணம் செய்துகொண்டதாக யோஷ்னா கூறினார். ஆனால், ஷஜீன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தத்தாலேயே தங்கள் மகள் இவ்வாறு கூறுவதாக யோஷ்னாவின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், இந்த கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. ஜோத்ஸ்னாவின் உறவினர்கள் உள்ளிட்ட கிறிஸ்துவ மதத்தினர், இத்திருமணத்தை எதிர்த்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் மதத்துப் பெண்ணை, 'லவ் ஜிஹாத்' எனப்படும், வலுக்கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்ததாக, ஷெஜின் மீது குற்றஞ்சாட்டினர். மேலும், இந்த விவகாரம் கோர்ட்டிற்கு சென்ற நிலையில் யோஷ்னாவும், ஷஜீனும் இணைந்து வாழ எந்த தடையும் இல்லை என கோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்த கலப்பு திருமண விவகாரம் கேரள அரசியலில் பூதாகரமாகியுள்ளது. பல்வேறு கட்சிகளும் இந்த விவகாரத்தில் பலத்தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இதனால், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் நிர்வாகியான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஷஜீன் மற்றும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்த யோஷ்னாவின் திருமணம் கேரள அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

முதலில் திருமணம் குறித்து எதிர்ப்பு தெரிவித்த தாமஸ், “கட்சி பெண், பெற்றோரின் உணர்வுகளுக்கு இசைகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், ஷெஜின் தவறான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கட்சி ஆய்வு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து DYFI வெளியிட்டுள்ள அறிக்கையில், “DYFI தலைவரின் திருமணம் தொடர்பான சர்ச்சை தேவையற்றது. இது இரண்டு பேரின் தனிப்பட்ட விருப்பம். DYFI என்பது மதச்சார்பற்ற திருமணங்களை ஊக்குவிக்கவும், மதங்களுக்கு இடையிலான உறவுகளை ஊக்குவிக்கவும் ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்திய ஒரு அமைப்பாகும். ஷெஜின் மற்றும் ஜோய்ஸ்னா திருமணம் முற்போக்கான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளது. அந்த ஜோடிக்கு அமைப்பு தங்களது ஆதரவை அளிக்கும்” என்று கூறியிருந்தது.

இதற்கு தாமஸ், "கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. DYFI தலைவர் அவரது திருமணத்தை கட்சிக்கு தெரிவித்திருந்தால், கட்சி தலைமை தனது முழு ஆதரவையும் வழங்கியிருக்கும். அவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றிருக்கக் கூடாது. இது இப்பகுதியில் கிறிஸ்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது,'' என்று தன் கருத்திலிருந்து பின் வாங்கினார்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் கோழிக்கோடு மாவட்ட செயலர் மோஹனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "சிறுபான்மையின சமூகத்தினரை ஒடுக்க, லவ் ஜிகாத் என்ற வர்த்தையை, வலதுசாரி அமைப்புகள் உபயோகிக்கின்றன. கலப்பு திருமணம் தனி நபர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடக்கும் நிகழ்வு. இதை சட்டமும் அனுமதிக்கிறது. தாமஸ் வாய் தவறி பேசிவிட்டார்." என்று அவர் கூறினார். இதற்கிடையே, தன் உறவினர்களின் குற்றச்சாட்டை, ஜோய்ஸ்னா திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget