நிர்மலா சீதாராமன் நம்பர் 1, நீடா அம்பானி நம்பர் 2.. Fortune India-வின் டாப் 50 பவர்ஃபுல் பெண்கள்..
`ஃபார்ச்சூன் இந்தியா’ செய்தி இதழ் சார்பாக, 2021ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த பெண்களுள் டாப் 50 இந்தியப் பெண்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
`ஃபார்ச்சூன் இந்தியா’ செய்தி இதழ் சார்பாக, 2021ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த பெண்களுள் டாப் 50 இந்தியப் பெண்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொது வாழ்வில் ஈடுபடும் பல்வேறு பிரபலப் பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு துறைகளைச் சார்ந்து நாட்டுக்குத் தங்கள் பங்களிப்பைச் செலுத்திய பெண்களை அங்கீகரித்துள்ளது `ஃபார்ச்சூன் இந்தியா’ செய்தி இதழ்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிறுவனருமான நீட்டா அம்பானி இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவரது தொலைநோக்குப் பார்வைக்காகவும், ரிலையன்ஸ் நிறுவனம் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஏழைகளுக்கு உதவி செய்த தலைமைப் பண்புக்காகவும் அவர் பாராட்டப்பட்டுள்ளார்.
`நம் நிறுவனர் நாட்டின் சக்திவாய்ந்த டாப் 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நீட்டா அம்பானியின் தொலைநோக்குப் பார்வையும், தலைமைப் பண்பும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொடர் முயற்சிகளும் அவருக்கு இந்த இடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது’ என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Our founder featured in #Fortune India's list of country's 50 most powerful women! Smt Nita Ambani's #vision and #leadership of Reliance Foundation led to multiple need-based efforts to help India tide over the COVID-19 crisis.https://t.co/AK6H45nDoN pic.twitter.com/x94MZCEocj
— Reliance Foundation (@ril_foundation) November 30, 2021
இந்தப் பட்டியலில் முதலிடம் பெற்றிருப்பவர், இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மூன்றாவது இடத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சௌமியா சுவாமிநாதன் இடம்பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் நீட்டா அம்பானியின் மகளும் இடம்பெற்றுள்ளார். அவருக்கு இந்தப் பட்டியலில் 21வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
டாப் 20 பெண்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:
1. நிர்மலா சீதாராமன்
2. நீட்டா அம்பானி
3. சௌமியா சுவாமிநாதன்
4. கிரண் மஸும்தார் ஷா
5. சுசித்ரா எல்லா
6. அருந்ததி பட்டாச்சார்யா
7. கீதா கோபிநாத்
8. டெஸ்ஸி தாமஸ்
9. ரேகா மேனன்
10. சுனிதா ரெட்டி, ஷோபனா கமினேனி, ப்ரீத்தா ரெட்டி, சங்கீதா ரெட்டி
11. அன்ஷுலா கண்ட்
12. ரேணு சூத் கர்னாட்
13. ஷோபனா பார்தியா
14. கல்லி பூரி
15. ரேவதி அத்வைதி
16. லீனா நாயர்
17. மல்லிகா ஸ்ரீனிவாசன்
18. சுவாதி பிராமல்
19. விஷாகா முல்யே
20. விபா படைகர்