மேலும் அறிய

NEET Exam: நாடு முழுவதும் நீட் தேர்வு நிறைவு...! வினாத்தாள் எப்படி இருந்தது?

மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்.க்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நிறைவு பெற்றது. இந்த தேர்வை சுமார் 21 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு ஆகிய படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அறிவிக்கப்பட்டபடி நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் நீட் தேர்வை எழுதினர். தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதினர்.

வினாத்தாள் எப்படி இருந்தது?

உயிரியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தேர்வு மாணாவர்கள் கூறினார். மொத்தத்தில் வினாத்தாள் மிகவும் கடினமாகவோ அல்லது மிகவும் எளிதாகவோ அல்லாமல் நடுநிலையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 

தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் காலை 11.30 மணியில் இருந்தே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1.30 மணி வரை மட்டுமே அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுமைய அனுமதி சீட்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சரிபார்த்து மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதியவர்கள் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

கட்டுப்பாடுகள்:

தேர்வறையில் கைபேசி, கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டது. தலைமுடியில் ஜடை பின்னல் போட அனுமதிக்கப்படவில்லை. அனுமதிச்சீட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இல்லாத பட்சத்தில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது. தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால் தேர்வின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மணிப்பூரில் கலவரம் காரணமாக நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையால்,  அங்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அங்கு நீட் தேர்வு நடத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
Embed widget