NCRB Report: நாளுக்குநாள் அதிகரிக்கும் தற்கொலை.. முதல்வரிசையில் இருக்கும் தமிழ்நாடு! அதிர்ச்சி ரிப்போர்ட்!!
இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
NCRB data 2021: Maharashtra reports highest number of suicides (over 22,000) among all Indian states, followed by Tamil Nadu (approx 15,000) & MP (13,500). Total suicide cases in India last year were 1.64 lakh
— Press Trust of India (@PTI_News) August 29, 2022
தற்கொலைக்கான காரணங்கள் :
தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் :
- மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
- தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
- மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
- மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
- கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)
அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில் 50.4% முதல் ஐந்து மாநிலங்களில் உள்ளது. அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 49.6% தற்கொலைகள் பதிவாகியுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு - 39.7%, சிக்கிம் 39.2% ,புதுச்சேரி -31.8%, தெலுங்கானா - 26.9% மற்றும் கேரளா 26.9% ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
மேலும் படிக்க : IND vs PAK, Asia Cup Win: ஒளியே வழியாக மலையே படியாக..இனிஒரு விதி செய்வோம்.. இந்திய வெற்றியை கொண்டாடும் மக்கள்
உத்தரப் பிரதேசம் :
இந்தியாவில் மக்கள்தொகை அடிப்படையில் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் (மக்கள்தொகையில் 16.9%) மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளது. கடந்த 2021 ம் ஆண்டு 3.6% வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
யூனியன் பிரதேசங்கள் :
யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் 2840 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. 504 தற்கொலைகளுடன் புதுச்சேரி இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், நாட்டின் 53 மெகாசிட்டிகளில் 25,891 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது.