கல்வித் துறை வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ வெளியிட்ட அதிகாரி! ஷாக்கான சக அதிகாரிகள்!
பெண் கல்வி அதிகாரி ஒருவர், பள்ளி வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அந்த குழுவிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து மேலும் பலர் குழுவிலிருந்து வெளியேறினர்.
சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள், ஆக்ராவில் உள்ள அடிப்படைக் கல்வித் துறையின் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோக்கள் பதிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ
இந்த வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து, பெண் அதிகாரி உட்பட பலர் குழுவிலிருந்து வெளியேறியுள்ளனர். இத்துறைக்கு தேவையான உத்தரவுகள் மற்றும் பிற தகவல்களை வழங்க, தனியார் பள்ளிகளின் குழு ஒன்று, துறையால் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் குழு 2 பெயர்களுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு, ஓய்வு பெற்ற ஆசிரியரும், தற்போது தனியார் பள்ளி நடத்துனருமாக இருக்கும் ஒருவர் அந்த குரூப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, மேலும் இருவரின் மொபைல் எண்களில் இருந்து அதே குரூப்பில் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
கல்வி அதிகாரி வெளியேற்றம்
பெண் கல்வி அதிகாரி ஒருவர், பள்ளி வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அந்த குழுவிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து மேலும் பலர் குழுவிலிருந்து வெளியேறினர். ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இது குறித்து, நகர் கல்வி அலுவலர், உயர் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து உள்ளார்.
மொபைல் ஹேங் ஆகி விட்டது
3 ஆசிரியர்களும் அவர்களது மொபைலில் ஆபாச படம் வைத்திருந்துள்ளார்கள், அதையே அவர்கள் ஷேர் செய்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு பள்ளியிலும், பெற்றோர் மத்தியிலும் நல்ல மரியாதை இருந்து வந்தது. எல்லோரும் அவர் போல வளர வேண்டும் என்றுதான் அவரை உதாரணம் காட்டுவார்கள் பெற்றோர்கள். அந்த மூன்று ஆசிரியர்களும், தங்களது வாட்ஸ்அப் ஹேங் ஆகி விட்டதாகவும், அந்த சமயத்தில் தெரியாமல் அந்த வீடியோ பதிவாகி விட்டதாகவும் கூறுகிறார்கள்.
வளரும் குழந்தைகளின் பாதிப்பு
எது எப்படியோ, அந்த வீடியோக்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இப்போதுதான் வெளியிடப்பட்டு உள்ளது. அதனை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது போன்று சிறியவர்கள் முதல் பலர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியை ஏதாவது செய்தியை பகிரும்போது நாம் கவனத்துடன் செய்தல் வேண்டும். ஏனென்றால் வளரும் குழந்தைகள் வளரும் பருவத்தில் எதைக்கண்டுவளர்கிறார்களோ அதுவே அவர்களது வாழ்வில் பிரதிபலிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்