கவனக்குறைவால் வேறு அக்கவுண்டில் ஏறிய ரூ.7 லட்சம்! லாட்டரி பணம் என விபூதி அடித்த டகால்டி பார்ட்டி..
மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு வேண்டியவருக்கு பணம் அனுப்ப வேண்டி அவசரமாக ரூ.7 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு பணம் சென்று சேரவில்லை.
எல்லாமே டிஜிட்டல்வசமாகிவிட்ட நிலையில் பணத்தை அனுப்ப இப்போதெல்லாம் யாரும் வங்கிக்கி போவதில்லை. பெரிய தொகை என்றால் மட்டுமே வங்கிக்குச் சென்று பணத்தை பரிமாற்றுவார்கள்.சிறு தொகை என்றால் செல்போனிலேயே வேலையை முடித்துவிடுவார்கள். ஆனால் எந்த வகையில் பணத்தை பரிமாற்றம் செய்தாலும் கவனம் மிகமிக முக்கியம். சற்று கவனம் தடுமாறினாலும் நமது பணம் வேறு யாருக்கும் சென்றுவிட வாய்ப்புண்டு. அப்படியான ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. அதுவும் ரூ.7 லட்சம்.
மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு வேண்டியவருக்கு பணம் அனுப்ப வேண்டி அவசரமாக ரூ.7 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு பணம் சென்று சேரவில்லை. ஏன் பணம் அந்த அக்கவுண்டுக்கு செல்லவில்லை என செக் செய்து பார்த்தபோது ரூ.7 லட்சமும் வேறு அக்கவுண்டுக்கு சென்றுவிட்டது. இதனால் ஷாக்கான அந்த பெண் உடனடியாக வங்கிக்கிளையை அணுகியுள்ளார். அனுப்பப்பட்ட பணத்தை திரும்பப் பெற வங்கி மூலமாக உதவி செய்ய முடியாது என்றும், சட்ட ரீதியாக அணுகுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
உடனடியாக இது தொடர்பாக சைபர் க்ரைமை அணுகியுள்ளார் அப்பெண். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் எந்த வங்கிக்கணக்குக்கு பணம் சென்றது என ஆய்வு செய்து அந்த வங்கிக்கணக்கின் நபரை தொடர்புகொண்டுள்ளனர். பணம் தொடர்பாக கேட்டுக்கொண்ட அந்த நபர் அந்த பணத்தை திரும்ப தரமுடியாது என்றும், அது லாட்டரியில் விழுந்த பணம் என்றும் பதில் அளித்துள்ளார். ஆனால் அவரை தொடர்ந்து ஃபாலோ செய்த போலீசார் பணத்தை திரும்ப தரவில்லை என்றால் சட்ட ரீதியிலான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன அந்த நபர் பணத்தை திரும்பத்தர சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி இரண்டு நாட்களில் முழு பணமும் அந்தப்பெண்ணின் அக்கவுண்டுக்கு திரும்ப வந்துள்ளது.
பொதுவாக நம் கவனக்குறைவால் வேறு ஒருவரின் அக்கவுண்டில் பணத்தை அனுப்பவது என்பது சிக்கலான ஒரு விஷயம்தான். யார் அக்கவுண்டில் பணத்தை தவறுதலாக அனுப்பினீர்களோ அவரின் அனுமதி இல்லாமல் அந்தப்பணத்தை திரும்ப பெற முடியாது. அதேபோல் வங்கியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. சம்பந்தப்பட்டநபர் உரிய அனுமதி வழங்கவில்லை என்றால் சட்ட ரீதியாகத்தான் அணுக முடியும். எது பணம் அனுப்பியவருக்கேகூட எதிராக போகலாம். அதனால் யாருக்கு பணத்தை அனுப்ப நினைத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை வங்கி விவரங்களை செக் செய்துவிட்டு பணத்தை அனுப்புவது பாதுகாப்பானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்