மேலும் அறிய

போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்ற கங்கனா மீது வழக்கு!

டெல்லியில் போராடிய விவசாயிகள் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் யாரிடமும் கருத்து கேட்காமல் நாடு முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சட்டத்தை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது. இதனால் அதிர்ச்சியும்,  ஆத்திரமும் அடைந்த விவசாயிகள் கடந்த ஒருமாத காலமாக டெல்லியில் அற வழியில் தொடர்ந்து போராடிவந்தனர். இந்த போராட்டத்தில் 750 க்கு மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரையும் பலிகொடுத்தனர். 

இந்த சூழல் இப்படி இருக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், “விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருள்களைச் சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. மூன்று வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மிக விரிவான விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களின் நலன்களை விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம். ஒரு வருடத்துக்கு மேலாகப் போராடிவரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவித்தார். 

காலிஸ்தான் தீவிரவாதிகளை கொசுக்களைப்போல அடக்கியவர் இந்திராகாந்தி : சர்ச்சையை தொடரும் கங்கனா

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து நன்றியும், பாராட்டும் குவிந்தன. ஆனால் கங்கனா ரணாவத்தோ, 'இது வெட்கக்கேடான செயல்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், 

காலிஸ்தான் தீவிரவாதிகள் இன்று வேண்டுமானால் அரசை வளைத்திருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணை மறக்கக்கூடாது. நாட்டில் பெண் பிரதமர் மட்டுமே காலிஸ்தான் தீவிரவாதிகளை தன் கால் ஷுவால் நசுக்கினார். இந்த நாட்டுக்கு அவர் எவ்வளவுதான் கெடுதல் விளைவித்திருந்தாலும், தன் உயிரைப் பணையம் வைத்து கொசுக்களை நசுக்குவது போல் காலிஸ்தான் தீவிரவாதிகளைக் காலால் நசுக்கினார். இன்றும் அவர் பெயரைக்கேட்டாலே நடுங்குகிறார்கள். அவரைப்போன்ற ஒருவர் அவர்களுக்குத் தேவை என்று குறிப்பிட்டிருந்தார். 

இவரின் இந்த பதிவை பார்த்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அவர் தனது கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில், கங்கனாவின் இந்தப் பதிவு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாக தெரிவித்து டெல்லியில் இயங்கி வரும் சீக்கிய அமைப்பான குருத்வாரா மேலாண்மை கமிட்டி சார்பில் அதன் தலைவரான மாஞ்சிந்தர் சிங் சிர்ஸா மும்பை காவல்துறையில் கங்கனா மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில்,  நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Tirunelveli mayor : “ராஜினாமா செய்த மேயர் சரவணன்” நெல்லையின் புதிய மேயர் யார்..? யாருக்கு ஜாக்பாட்..?
Tirunelveli mayor : “ராஜினாமா செய்த மேயர் சரவணன்” நெல்லையின் புதிய மேயர் யார்..? யாருக்கு ஜாக்பாட்..?
இந்திய வம்சாவளிகளை கவர்ந்து இங்கிலாந்து பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்! யார் இவர்?
இந்திய வம்சாவளிகளை கவர்ந்து இங்கிலாந்து பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்! யார் இவர்?
TANGEDCO: டிப்ளமோ படித்தவரா? ’டான்செட்கோ’வில் தொழில் பழகுநர் பயிற்சி - முழு விவரம்!
TANGEDCO: டிப்ளமோ படித்தவரா? ’டான்செட்கோ’வில் தொழில் பழகுநர் பயிற்சி - முழு விவரம்!
Breaking News LIVE, June 5: மைவி3 ஏட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன் நீதிமன்றத்தில் சரண்
Breaking News LIVE, June 5: மைவி3 ஏட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன் நீதிமன்றத்தில் சரண்
Embed widget