அவங்களுக்கும் ஆசை இருக்குமே! போக்சோ வழக்கில் கைதானவருக்கு ஜாமின் வழங்கி அதிர்ச்சியளித்த கோர்ட்!
மும்பையில் 16 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி பின்னர் கைதான 20 வயது இளைஞருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இது பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் 16 வயது பெண்ணுடன் வெளியேறிய 20 வயது இளைஞர் ஒருவருக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மும்பையில் 20 வயதிற்குட்பட்ட ஒருவன் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது எதிர்காலத்தை கருத்தில்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் தங்களது பெண்ணை அந்த 20 வயது இளைஞர் கடத்தி சென்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 20 வயது இளைஞரை மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து, விசாரித்த நீதிமன்றம், காதலில் ஈடுபட்டுள்ள ஒரு பையன், தனது எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு தனது 16 வயது காதலியுடன் தப்பி ஓடிவிட்டான். இதனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியதாகவும், இதன் காரணமாக அந்த சிறுவன் 30 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.
டீன் ஏஜ் பருவத்தினரிடையே பாலியல் தூண்டுதல் மற்றும் அத்தகைய வழக்குகளில் பரிசீலிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் மும்பை உயர் நீதிமன்றம் உள்ளது. இதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட 20 வயதுடைய நபர் காதல் விவகாரத்தில் சிறையில் அடைப்பது தேவையற்றது.
இதற்கு முன்னதாக அந்த நபர் மீது குற்றவியல் முன்னோடி எதுவும் இல்லை என்று சிறப்பு போக்சோ நீதிமன்றம் கூறியது. பாலியல் ஆசை நபருக்கு நபர் வேறுபடுகிறது. ஏனெனில் உயிரியல் ரீதியாக, குழந்தைகள் பருவமடையும் போது, அவர்கள் தங்கள் பாலியல் ஆசைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள். இன்றைய இளைஞர்கள் பாலியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதும், பாலியல் உறவுகள் குறித்தும் அவர்களுக்கு ஏராளமான தகவல்கள் கிடைப்பதை கண்டறிய முடிகிறது என்றது.
ஒரு பையனும், மைனர் பெண்ணும் காதலித்து, பெற்றோரின் அனுமதியின்றி ஒன்றாக வாழ முடிவு செய்யும் போது அவர்கள் பல்வேறு எண்ணங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த உயர் நீதிமன்றம், குழந்தையின் வயது, மற்றும் அவரது எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அந்த சிறுவனுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
மேலும், அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பிய போதிலும், அவர் சிறார் என்ற அடிப்படையில் போக்சோ சட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கியது. தற்போது இந்த மனுவை அரசு தரப்பு எதிர்த்துள்ளது. பையனுக்கு 20 வயதாக இருந்தாலும், சிறுமிக்கு 16 வயதுதானே ஆகிறது. அப்படியானால் ஜாமின் வழங்கப்பட்டது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்