Anant Ambani Wedding: 51 ஆயிரம் பேருக்கு விருந்து.. களைகட்டத் தொடங்கிய முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணம்!
ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் 4 மாதங்கள் முன்னதாகவே திருமண கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று மிகப்பெரிய விருந்து திருவிழா நடைபெற்றுள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரிலையன்ஸ் நிறுவனங்கள் குழு தலைவரும், முன்னணி தொழிலதிபருமான முகேஷ் அம்பானி வீட்டில் மூன்றாவது கல்யாணம் நடைபெற உள்ளது. 1985 ஆம் ஆண்டு நீடா அம்பானியை திருமணம் செய்துக் கொண்ட முகேஷ் அம்பானிக்கு இஷா அம்பானி என்ற மகளும், ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் இஷா, ஆகாஷூக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்து விட்டது.
இப்படியான நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. குஜராத்தின் ராதிகா மெர்ச்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்தாண்டு ஜனவரி மாதம் நடந்தது. குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் 4 மாதங்கள் முன்னதாகவே திருமண கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க உலகின் முன்னணி தொழிலதிபர்கள், இந்திய அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Such lovely Hindu Sanskar ❤️ Richest Man of India Mukesh Ambani himself Serving Food to villagers following the Anna Daan Ritual ahead off Anant Ambani and Radhika Merchant Wedding 🙏 #MukeshAmbani#AnantAmbani #RadhikaMerchant pic.twitter.com/dOwS1sThQ6
— Rosy (@rose_k01) February 28, 2024
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல், கேத்ரீனா கைஃப், மாதுரி தீட்சித், ஆதித்யா சோப்ரா, கரண் ஜோஹர், போனி கபூர், அனில் கபூர் , சித்தார்த் மல்ஹோத்ரா, ஷ்ரத்தா கபூர், கரிஷ்மா கபூர், வருண் தவான்சல்மான் கான், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன், சைஃப் அலிகான், சங்கி பாண்டே, ரன்வீர் சிங், தீபிகா படுகோனே என திரைத்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை தொடங்கும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனிடையே இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று இரவு ஜாம்நகரை சுற்றியுள்ள மக்கள் அனைவரையும் விருந்துக்கு முகேஷ் அம்பானி குடும்பம் அழைத்திருந்தனர். இதில் 51 ஆயிரம் பேருக்கு அம்பானி குடும்பம் விருந்து அளித்து மகிழ்ச்சியளித்தது. இந்த விருந்தை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அனைவரும் இணைந்து பரிமாறினர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Anant Ambani: அமிதாப் முதல் ரஜினி வரை.. அம்பானி மகன் திருமண கொண்டாட்டத்திற்கு பிரபலங்களுக்கு அழைப்பு!