இடையில் நிற்காத பயணம்... பூஜைக்கு வந்த இடத்தில் வெடித்த புது புல்லட்...! அதிரவைக்கும் அதிர்ச்சி வீடியோ
உயிர் இழப்புகள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.இருந்தாலும் வாகனம் வெடித்ததற்கான காரணம் எதுவும் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு கோவில் அருகே புல்லட் வெடிப்பு சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் அனந்தபூரில் உள்ள குண்டக்கல் பகுதியில் காசாபுரம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அங்கே கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் வண்டி வெடித்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
In a #Shocking incident, a new #BulletBike suddenly caught #fire & #exploded with a loud noise at #Guntakal area in #Anantapur dist of Andhra Pradesh. The bike was engulfed in #flames after the biker parked it infront of a temple to perform a pooja.
— Surya Reddy (@jsuryareddy) April 3, 2022
#BikeFire #AndhraPradesh pic.twitter.com/GwHlNPLusz
வாகன உரிமையாளர் கோவில் வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் சமயத்தில் புல்லட் வெடித்துள்ளது.மைசுருவைச் சேர்ந்த ரவிச்சந்திரா என்பவருடைய வாகனம்தான் அது. மைசுருவிலிருந்து காசாபுரம் ஆஞ்சநேயரைப் பார்க்க 471 கிமீ தூரம் வண்டியிலேயே பயணித்து வந்துள்ளார். இடைவிடாமல் வாகனம் ஓட்டி வந்ததுதான் வாகனம் வெடித்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. காசாபுரத்தில் வாகனம் நின்ற சில நிமிடங்களிலேயே வண்டி தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக பெட்ரோல் டேங்கும் வெடித்தது. மக்கள் உடனடியாக நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்தனர்.உயிர் இழப்புகள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும் வாகனம் வெடித்ததற்கான காரணம் எதுவும் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி நடைபெறுகிறது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அந்தக் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் 2 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி அருகே கோயில் கட்டியுள்ளார்.
காளஹஸ்தியை சேர்ந்த எம்எல்ஏ மதுசூதனன் ரெட்டி சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே ஒரு கோயிலுடன் கூடிய அருங்காட்சியகத்தை கட்டியுள்ளார். ஆந்திராவில் செயல்படுத்தப்படும் ஒன்பது நலத்திட்டங்களை பிரதிபலிக்கும் விதமாக கட்டப்பட்ட கோயில், நவரத்தினங்கள் கொண்ட கண்ணாடி மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கோயிலில் கண்ணாடி மண்டபம் கட்டப்பட்டு, வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர் சிலை நிறுவப்பட்டது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில நிபுணர்களை கொண்டு கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்காக எம்எல்ஏ தனது நிதியை பயன்படுத்தியும், தலைவர்களிடமிருந்தும், கட்சியினரிடமிருந்தும் பணத்தை சேகரித்துள்ளார்.
தொடக்கத்தில், இந்தக் கோயிலை கட்டுவதற்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் சுமார் 2 கோடியாக செலவு அதிகரித்தது. மேலும், இந்த கோயிலின் பின்னால் கட்டப்பட்ட ஜகன்னா ஹவுசிங் காலனியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.நவரத்தினங்கள் திட்டங்கள் மூலம் நிதி உதவி மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஆதரவை வழங்குவதன் மூலம் ஏழைகளை உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது. எனவே இந்தக் கோயிலுக்கு “நவரதன்லு ஆலயம்” என்று பெயரிடப்பட்டதாக எம்எல்ஏ கூறினார்.
இந்தக் கோயிலில் ஒன்பது தூண்கள் உள்ளன. அவை முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை சித்தரிக்கின்றன. எம்எல்ஏ தனது நிதியில் சுமார் 75 சதவிகிதத்தை செலவழித்து, மீதித்தொகையை கட்சியினரிடமிருந்து பெற்று கோயிலை கட்டினார். இந்தக் கோயிலுக்கு வருவோருக்கு ஜெகன்மோகன் ரெட்டி செய்த நலத்திட்டங்கள் குறித்த கையடக்க பிரதிகள் அளிக்கப்படுகின்றன. ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் நவரத்னலு திட்டம் குறித்த படங்கள் வைக்கபட்டு உள்ளன. முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் உள்ள உண்டியில் பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வழங்குவதற்கு பதிலாக, மக்கள் தங்கள் வேண்டுகோள்களையும் குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம்.