மேலும் அறிய

Brick kiln blast : செங்கல் சூளை தீ விபத்து; காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் - முதலமைச்சர் அறிவிப்பு!

Motihari brick kiln blast : பீகார் செங்கல் சூளை தீ விபத்திற்கு பிரதமர், முதலமைச்சர் நிதிஷ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலம் மோதிஹரி பகுதியில் செங்கல் சூளையில் சிம்னி (Chimney) வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நிவாரண தொகை வழங்கியுள்ளனர்.

செங்கல் சூளையில் விபத்து:

 பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டம், மோதிஹரி பகுதியில் உள்ள ராம்கர்வா கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. அங்கு திடீரென ஏதே வெடித்தது போன்ற சத்தம் எழுந்தது.  சிம்னி வெடித்து சிதறி தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 6 பேர் நேற்று உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இன்றைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பிரதமர் இரங்கல்:

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளிடிட்டுள்ள டிவிட்டர் பதிவில். “ பீகார் மோதிஹரி பகுதியில் நிகழ்ந்த விபத்து வருத்தமளிக்கிறது. உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பீகார் முதலமைச்சர் இரங்கல்: 

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழதவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் தொகையும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை மாநில அரசு ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Embed widget