உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்த பிரதமர் மோடி..! பட்டியல் இதோ!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட 22 உலக தலைவர்கள் அடங்கிய பட்டியலில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி உள்ளார் பிரமதர் மோடி.
![உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்த பிரதமர் மோடி..! பட்டியல் இதோ! Most Popular Global Leader PM Modi Tops the list With 78 percent Rating know more details உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்த பிரதமர் மோடி..! பட்டியல் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/46278d06a6393900482564aa63397feb1675512404305224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 78 சதவிகித மக்களின் ஆதரவை பெற்று முதலிடத்தில் உள்ளார் மோடி.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட 22 உலக தலைவர்கள் அடங்கிய பட்டியலில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி உள்ளார் பிரமதர் மோடி.
இந்தாண்டு ஜனவரி 26 முதல் 31ஆம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதை விவரித்த மார்னிங் கன்சல்ட் நிறுவனம், "ஒவ்வொரு நாட்டிலும் வயது வந்த குடிமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு நாட்டின் மாதிரி அளவும் வேறுபடுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 சதவீத ஆதரவை பெற்ற நிலையில், பிரதமர் மோடி 78 சதவீத ஆதரவை பெற்றுள்ளார். அதேபோல, மோடிக்கு எதிராக 18 சதவிகிதத்தினர் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர். ஜனவரி மாதம் மூன்றாம் வாரம், 79 சதவிகிதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 68 சதவீத ஆதரவை பெற்று இரண்டாவது இடத்தையும், சுவிஸ் அதிபர் அலைன் பெர்செட் 62 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் 40 சதவீத ஆதரவை பெற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் முறையே 7 மற்றும் 9-வது இடத்தை பிடித்துள்ளனர். இத்தாலியின் பிரதமராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீவிர வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனி, 52 சதவீத ஆதரவை பெற்று பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 30 சதவீத ஆதரவை பெற்று பட்டியலில் 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். உக்ரைன் - ரஷ்ய போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், இது போருக்கான காலம் என பிரதமர் மோடி பேசியது அனைவரின் வரவேற்பையும் பெற்றிருந்தது.
World's Most Popular Leader!
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) February 3, 2023
The Pradhan Sevak of the world's largest democracy, PM @NarendraModi Ji, leads among global leaders with an approval rating of 78% 🇮🇳
PM Modi Ji's works, policies, and vision speak for him! pic.twitter.com/Yv9DgW3ub6
உக்ரைன் - ரஷ்ய போர் உலகையே மூன்றாவது உலக போரின் விளம்பில் கொண்டு போய் நிற்க வைத்தது. பெரும்பாலான நாடுகள், இவ்விரண்டில் ஒரு நாடுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், இந்தியா மட்டும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)