மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் என்ன நடந்தது..? உடனடியாக அறிய வேண்டுமா? தலைப்பு செய்திகள் இதோ!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு : தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் 15,000 பேர் பங்கேற்பு
- கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை விவகாரம் : 162 மாணவிகளின் வாக்குமூலம் பதிவு - உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
- சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வானது ஆகஸ்ட் 2ல் தொடக்கம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
- 10 லடசம் பேர் இலக்கை கடந்து நான் முதல்வன் திட்டத்தில் 13 லட்சம் பேர் பயன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
- சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பாக பரிசோதனைக்கு வந்த சிறுமிகள் தற்கொலை முயற்சி என்பது தவறான தகவல் - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
- 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ. 3.30 கோடி நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
- பச்சைபட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - மழையில் நின்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 10 லட்சம் வேளாண் இடு பொருட்களுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் : வணிகர் சங்க மாநாட்டில் தீர்மானம்
- ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக மாற்றிய முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிதான் - அமைச்சர் சேகர்பாபு
- கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு ஓட்டுநர், நடத்துனரை கூட பணிக்கு எடுக்கவில்லை - போக்குவரத்துத்துரை அமைச்சர் சிவசங்கர்
இந்தியா:
- இனக்கலவரத்தால் மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் சூழலில் அங்கு நிலவரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆன்லைன் மூலம் ஆய்வு செய்தார்.
- கர்நாட்காவில் கடந்த நான்கு ஆண்டுகளில், பாஜக எவ்வளவு ஊழலில் ஈடுபட்டது என்பதை விளக்கும் வகையில் ஊழல் விலை பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
- தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சரத் பவார் அறிவித்தது அவரது கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த முடிவை திரும்பப் பெற்று கொண்டார் சரத் பவார்.
- மத்தியபிரதேசத்தில் உள்ள மொரோனா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
- ஜம்மு காஷ்மீரில் நேற்று காலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
- தீவிரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் விதமாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- 'வேற எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், பாஜகவுக்கு வேண்டாம்' - மம்தா பானர்ஜி
உலகம்:
- இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று நடைபெற்ற விழாவில் நாட்டின் மன்னராக சார்லஸ் முடிசூட்டி கொண்டார்.
- சர்வதேச அளவில் இந்த ஆண்டு முதன்முறையாக உணவு விலை அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அங்கமான உணவு மற்றும் விசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.
- செர்பியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்தெந்த அணிகள் ப்ளேஆஃப்க்கு முன்னேறும் என குறிப்பிட்டுள்ளார்.
- ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக ஐயாயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் படைத்துள்ளார்.
- நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன், கே.எல்.ராகுல் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மல்யுத்த வீராங்கனைகள் போரை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion