மேலும் அறிய
Advertisement
Headlines 30 May: சுடச்சுட முக்கியச் செய்திகளை அறிய.. இதோ ஏபிபி-யின் காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..!
Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- ஜப்பான் நிறுவனுங்களுடன் ரூ.818 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது
- கள்ளச்சாராயம் மற்றும் சட்ட-ஒழுங்கை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்பாட்டம் - அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- முன்னறிவிப்பின்றி திடீரெனெ நடைபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் - அரசுத்தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து சமாதானம்
- போக்குவரத்து ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு - கடும் சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள்
- சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் போராட்டம் - சக பயிற்சி மருத்துவர் மீது நடத்தப்பட தாக்குதலுக்கு எதிர்ப்பு
- தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது
- தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்தது அக்னி நட்சத்திரம் - வெயிலின் தாக்கம் இனியாவது குறையுமா? என மக்கள் எதிர்பார்ப்பு
இந்தியா:
- பாஜகவை ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் விவகாரம் - பாட்னாவில் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க வாய்ப்பு
- வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்படது ஜி.எஸ்.எல்.வி.எஃப் - 12 ராக்கெட்
- டெல்லியில் 16 வயது சிறுமியை குத்திக் கொன்ற பயங்கர சம்பவம் - கொலை செய்த இளைஞர் உத்தரபிரதேசத்தில் வைத்து கைது
- ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு - புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றவர்களை தடுத்து கைது செய்த நிலையில் நடவடிக்கை
- ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு - பெண்களின் வங்கிக் கணக்கில் 15 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என நம்பிக்கை
- ராஜஸ்தானில் முடிவுக்கு வந்தது காங்கிரஸ் பனிப்போர் - மூத்த தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஒன்றிணைந்து செயல்பட முடிவு
- கர்நாடக மாநிலம் மைசூரு அருகே தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதல் - குழந்தைகள் உட்பட 10 பேர் பலியான சோகம்
உலகம்:
- நைஜீரியாவின் 16வது அதிபராக பதவியேற்றார் போலா தினுபு
- ஐ.நாவின் தடையை மீறி ராணுவ உளவு செயற்கைகோள்களை அனுப்பும் வடகொரியா
- பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கும் 5 குறுங்கோள்கள் - நாசா தகவல்
- அமெரிக்காவில் சிரித்த முகத்துடன் 4 ஆண்டுகளாக கெடாமல் இருக்கும் கன்னியஸ்திரி உடல் - விழுந்து வணங்கி செல்லும் மக்கள்
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி கோப்பையை வென்று அசத்தல் - குஜராத் அணியை வீழ்த்தி அபாரம்
- ஐபிஎல் கோப்பை உடன் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார் சென்னை அணியின் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு
- ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம் - மனம் திறந்த சென்னை அணி கேப்டன் தோனி
- அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான விருதை முகமது ஷமியும், அதிக ரன்களை அடித்த வீரருக்கான விருதை சுப்மன் கில்லும் பெற்று அசத்தினர்
- கோப்பையை வென்ற சென்னை அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion