மேலும் அறிய
Headlines 29 May: நேற்று நடந்தது, இன்று நடக்கப்போவதை அறிய.. இதோ ஏபிபி-யின் காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..!
Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- டோக்கியோ சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜப்பான் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு - ஜப்பான் என்றால் உழைப்பு, சுறுசுறுப்பு மற்றும் உழைப்பாளர்களுக்கான நாடு என முதலமைச்சர் பேச்சு
- சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பதவியேற்றார்
- இந்தியாவின் இதயம் போன்ற நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு
- தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நடத்த திட்டம்
- அணைக்கட்டு பகுதியில் பாம்பு கடித்து உயிரிழந்த குழந்தை - சாலை வசதி இல்லாத காரணத்தால் 10 கி.மீ தூரம் உடலை கையில் தூக்கிச் சென்ற பெற்றோர்
- வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த விவகாரம் - கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 3 பேர் கைது
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகா திருவிழா வரும் 2ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
இந்தியா:
- 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிக்கிறது புதிய நாடாளுமன்ற கட்டடம் - திறப்பு விழாவிற்கு பின் பிரதமர் மோடி பேச்சு
- தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை ஆதினங்களின் புடை சூழ புதிய நாடாளுமன்றத்தில் வைத்தார் பிரதமர் மோடி - முன்னதாக சாஷ்டாங்கமாக விழுந்து செங்கோலை வணங்கினார்
- இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருக்கு எதிரான பாலியல் புகாரில் நியாயம் கோரி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்கள் - குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்திய போலீசார்
- மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் - பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்பது துரதிர்ஷ்டவசமானது என மல்யுத்த வீரர்கள் வேதனை
- மணிப்பூரில் ஊடுருவிய 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - முதலமைச்சர் பிரேன் சிங் தகவல்
- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது ”ஜி.எஸ்.எல்.வி.எப்-12” ராக்கெட் -2 ஆயிரத்து 232 கிலோ எடையிலான வழிகாட்டி செயற்கைகோளை சுமந்து செல்கிறது
- கர்நாடகாவில் கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து - குழந்தைகள் உட்பட 6 பேர் பலியான சோகம்
உலகம்:
- தென்கொரியாவில் நடுவானில் விமானத்தின் கதவை திறந்த விவகாரம் - 30 வயது இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிப்பு
- மீண்டும் துருக்கியின் அதிபராகிறார் எர்டோகன் - 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து அசத்தல்
- ஈரானுக்கு எதிராக 50 ஆண்டுகள் பொருளாதார தடை - உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
- போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக சினாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விமானிகள் பயணம் - முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது
- பாகிஸ்தானில் ஷவுண்டர் பனிச்சரிவு - நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- மழை காரணமாக நிறுத்தப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி - இன்று நடைபெறும் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் பலப்பரீட்சை
- நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெறுகிறேன் - சென்னை வீரர் அம்பத்தி ராயுடு டிவீட்
- மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - சாம்பியன் பட்டம் வென்று இந்திய வீரர் பிரனோய் அசத்தல்
- சர்வதேச கைப்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி சாம்பியன் - இறுதிபோட்டியில் கஜகஸ்தானை வீழ்த்தி அபாரம்
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி - 2வது சுற்றுக்கு முன்னேறினார் சபலென்கா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
சென்னை
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion