மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உலகம் டூ உள்ளூர் செய்திகளை நீங்கள் அறிய... ஏபிபியின் காலை 7 மணி தலைப்பு செய்திகள்!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தவறான செய்திகளை நம்ப வேண்டாம்; டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டு வாங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
- தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
- ஓபிஎஸ்,ஈபிஎஸ் அணி இணையாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தோல்வி நிச்சயம் - முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி
- தமிழ்நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும் - பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம்
- ஏற்காடு கோடை விழா இன்று தொடக்கம் - ஏற்பாடுகள் தீவிரம்
- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து சிகிச்சைப் பெற்று வந்த 39 பேரில் 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
- ராகுல்காந்தி இன்று தமிழ்நாடு வரவிருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மோசடி வழக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜகவில் கூட இணைவார் - கரூரில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி பேட்டி
- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- வங்கிகளில் வரும் 23ம் தேதி முதல் ரூ.2000 நோட்டு மாற்ற சிறப்பு கவுண்டர்கள்- வயதானோர் கியூவில் நிற்பதை தடுக்க பிரத்யேக ஏற்பாடு
- பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட விழா; கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்பு, டி.கே சிவக்குமார் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.
- அசாமில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் ஆகிய உடைகளை அணிய ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்த 500 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர்.
- கடந்தாண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து முதல்முறையாக, இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து கொள்கின்றனர்.
- நாட்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை தடை செய்தது ஏன்? என பிரதமர் மோடிக்கு ஐதராபாத் எம்.பி. அசாதுதின் ஓவைசி 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
- தலைநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
உலகம்:
- விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரை இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமர் - இலங்கை கண்டனம்
- சிங்கப்பூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 35 வயது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷியாவுக்குள் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.
- உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோத போருக்கு எதிராக ஒன்றாக நிற்போம்: ஜி-7 நாடுகள் அறிவிப்பு
விளையாட்டு:
- உலகக்கோப்பை வில்வித்தை : தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
- ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆக்கி தொடர்: 2-வது போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி
- கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
- குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் பெங்களூரு அணி இன்று களமிறங்குகிறது.
- டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion