மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் தொடங்கி உலக நிகழ்வுகள் வரையிலான அத்தனையும் அறிய..! இதோ, ஏபிபியின் தலைப்புச் செய்திகள்!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- மீனவர்களுக்கான 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் - பிரதமரின் பலவீனமான ஆட்சியாலேயே மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வதாக விமர்சனம்
- கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர்கள் உரிமையை காப்போம் - ராமநாதபுர மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை
- மீனவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் எதையும் திமுக நிறைவேற்றவில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
- மதுரையில் நாளை நடைபெறுகிறது அதிமுக மாநாடு - ரயில்கள் மூலம் குவியத் தொடங்கிய கட்சி தொண்டர்கள்
- சென்னையில் ரூ.45 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் - முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞர் கைது
- சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - 5 பேர் காயம்
இந்தியா:
- தென் ஆப்ரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் - 22 முதல் 24ம் தேதி வரை நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
- 2047ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமத்தையும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
- கடன்தாரர்கள் நிலையான வட்டி விகிதத்திற்கு மாற வாய்ப்பு தர வேண்டும் - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
- தணிக்கை குழு கூறிய ஊழல் புகார்கள் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிருப்தி - தவறு செய்தவர்கள் மீது பொறுப்பு நிர்ணயிக்க உத்தரவு
- சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டரின் வேகம் குறைப்பு - சுற்றுப்பாதையின் உயரமும் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல்
- அரசியலமைப்பு சட்டத்தால் உருவான ஜனநாயக அமைப்புகளை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சி - லடாக்கில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களின் பெயர்களை மாற்றும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை - 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
- மும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி அதிகாரி கைது - சிபிஐ அதிரடி நடவடிக்கை
- கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு மூன்றாவது நாளாக விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
உலகம்:
- புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு - சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
- இங்கிலாந்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் கத்திக் குத்து - காலிஸ்தான் ஆதரவாளர் கைது
- மாஸ்கோவில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் டிரோன் விமானம் - வர்த்தக மையம் மீது விழுந்ததால் பரபரப்பு
- கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம் - 10வது மாடியில் இருந்து குதித்த பெண் பலி
- பாகிஸ்தான் இடைக்கால அமைச்சரவையில், இந்திய சிறையில் இருக்கும் தீவிரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு இடம்
விளையாட்டு:
- அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் புதிய சாதனை - பிரான்ஸ் வீரர் மான்பில்சை தொடர்ந்து 19வது முறையாக வீழ்த்தி அசத்தல்
- உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - ஹங்கேரியில் இன்று தொடக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion