மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நாடறிய வேண்டுமா? உங்களுக்காக 4 நிமிடத்தில் இதோ! ஏபிபியின் காலை தலைப்பு செய்திகள்..!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 48 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி
- தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் அனல் - சென்னையில் அதிகபட்சமாக 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 109 டிகிரி தொட்டது.
- சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் 4 பெட்டிகள் கழன்றது.
- சினிமா தயாரிப்பு நிறுவனம் ‘லைகா’வுக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை - பல கோடி ரூபாய் முதலீட்டு ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்
- மெரினாவில் இருந்து 10 நிமிடங்களில் கிண்டி செல்ல புதிய மேம்பாலம் - திட்ட அறிக்கை தயாரிக்க நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
- கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி திரும்பும் நாளன்றே பாடநூல்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
- எக்கியார்குப்பம், சித்தாமூர் கள்ளச்சாரயம் மரண வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு
- "உதயநிதி ஒரு செங்கல்லை தூக்கினால் அமைச்சர் பதவி தருகிறார்கள், நாசர் செங்கல்லை தூக்கினால் பதவி விலக்குகிறார்கள்" - பிரேமலதா விஜயகாந்த்
- மரக்காணத்தில் கலப்பட சாராயம் குடித்து உயிரிழந்தது தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- தி.நகர் பேருந்து நிலையம் முதல் மாம்பலம் ரயில்வே நிலையம் வரையிலான இந்தியாவின் மிக நீண்ட ஆகாயமேடையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்தியா:
- கர்நாடக முதலமைச்சர் போட்டியில் இருக்கும் சித்தராமையா, சிவகுமாருடன் கார்கே சந்திப்பு; இருவரிடம் அரை மணிநேரத்திற்கு மேலாக தனித்தனியாக பேசியதாக தகவல்
- இறுதிகட்ட பணிகள் மும்முரம்: புதிய நாடாளுமன்ற கட்டிடம் இம்மாத கடைசியில் திறப்பு
- பணிபுரிவதற்கு தகுதியற்ற 650 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என அசாம் காவல்துறை தலைவர் ஜி.பி.சிங் தெரிவித்திருந்தார்.
- தேசிய அளவில் நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி வாயிலாக பங்கேற்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
உலகம்:
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது அந்த நாட்டின் உயர்நீதிமன்றம்.
- மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
- ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
- நியூசிலாந்து தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
- என் அனுமதியில்லாமல் புதியாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது - டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவு
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- இன்றைய ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
- இந்தியா நம்பர் 1 அணியாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு - இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளர் கிரேக் புல்டான்
- உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் எச்.எஸ்.பிரனாய், பி.வி.சிந்து முன்னேற்றம் கண்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion