மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: பரபரப்பான தேர்தல் களம்.. கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர்.. இன்றைய காலை தலைப்பு செய்திகள்!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது; அந்தமான் அருகே இன்று புயலாக மாறுகிறது.
- தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் விடுவிப்பு - டிஆர்பி ராஜாவுக்கு இடம்
- சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை: சட்டவிரோத பண பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
- கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்று டிடிவி தினகரந் ஓபிஎஸ் சந்திப்பு, கோமாளித்தனமானது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
- மணிப்பூர் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- மாணவ மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
- சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு வரும் 23-ம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் மே மாதம் 13.05.2023 அன்று (இரண்டாவது சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்தியா:
- அடுத்து ஆட்சி அமைக்கபோவது யார்? கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு - 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை
- முஸ்லீம்கள் இடஒதுக்கீட்டில் அரசியல் செய்யக்கூடாது : அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
- பிரதமர் மோடி மீது நடவடிக்கை தேவை - தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
- கர்நாடகாவில் வாக்களிப்பதை ஊக்குவிப்பதற்காக இலவச உணவு என்று அறிவித்த உணவகங்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் காதலன் அஃப்தாப் மீது கொலை வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மத்திய பிரேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்து ஐந்து சிவிங்கிப் புலிகளை வனப் பகுதிக்குள் திறந்துவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
- கிலோ ரூ.50க்கு குறைவான ஆப்பிள்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
- மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு
உலகம்:
- பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
- 42 ஆயிரம் இந்திய தொழிலாளர்களின் வருகையை அனுமதிக்கும் ஒப்பந்தங்களிலும் இஸ்ரேல்-இந்திய அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.
- பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியதில் 3 பயங்கரவாதிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
- பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகள் விரைவில் நீக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
- ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்கா நாடுகளுக்கு செல்வோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள மருத்துவத்துறை அறிவுரை
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
- மாநில ஜூனியர் பெண்கள் போட்டிக்கான சென்னை மாவட்ட ஆக்கி அணி நாளை தேர்வு நடைபெற இருக்கிறது.
- ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய வீரருமான சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி இன்னும் ஓராண்டு காலம் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion