மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: டி20 உலகக்கோப்பை சாம்பியனான இந்தியா.. ஓய்வை அறிவித்த கோலி, ரோகித் - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் - சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
- டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் சாராயத்தை நம்பி மக்கள் செல்வதாக அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சலசலப்பு
- பூரண மதுவிலக்குக்கான சூழல் தற்போது இல்லை - மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தகவல்
- 2026 தேர்தலில் திமுக கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும் - முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை
- டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து
- சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு - ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
- கள்ளச்சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- மது குறித்த அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
- மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நிறைவு - தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
- அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் - டிடிவி தினகரன் வேண்டுகோள்
- சேலம் பெரியார் பல்கலைக்கழகம் துணைவேந்தரின் பதவிக்காலம் நீட்டிப்பு - ஆளுநர் உத்தரவு
- தமிழ்நாட்டில் காரைக்குடி உள்ளிட்ட 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு - சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
இந்தியா:
- டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து
- லடாக் ஆற்றில் ராணுவ டேங்க் வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
- பீகாரில் கடந்த 9 நாட்களில் 5 மேம்பாலங்கள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
- விரைவில் வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைப்பு - ரயில்வே இணையமைச்சர் தகவல்
- கொட்டித் தீர்த்த கனமழை -டெல்லி மெட்ரோவில் ஒரே நாளில் 69 லட்சம் பேர் பயணம்
- இந்திய கிரிக்கெட் அணியால் நாம் பெருமை கொள்கிறோம் என பிரதமர் மோடி புகழாரம்
- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12 வரை நீதிமன்ற காவலில் வைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு
- சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்டில் பாஜக துடைத்தெறியப்படும் - ஹேமந்த் சோரன் சூளுரை
- டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
- நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
- தெலங்கானா கண்ணாடி தொழிற்சாலையில் வெடிவிபத்து - 5 பேர் உயிரிழப்பு
உலகம்:
- போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இந்திய மாணவர் நாடு கடத்தல்
- சிலியில் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் - ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு
- ஈரானில் ஜூலை 5 ஆம் தேதி இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி - நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்
- 17 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா - மைதானத்தில் வீரர்கள் கண்ணீர் விட்டு அழுது நெகிழ்ச்சி
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு அறிவிப்பு
- டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion