மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: விஜய் நடத்தும் பாராட்டு விழா.. ஃபைனலுக்குள் நுழைந்த இந்திய அணி.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு - திமுக அரசுக்கு அக்கறை இல்லை என ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்
- கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருநாள் உண்ணாவிரதம்
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு
- 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்துகிறார் த.வெ.க. தலைவர் விஜய்
- வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
- சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்
- சட்டப்பேரவையில் நேர்மையான முறையில் விவாதம் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் தயங்குவது ஏன்? - இபிஎஸ் கேள்வி
- ஒசூரில் 2000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் -சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
- கோவையில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையமும், திருச்சியில் கலைஞர் நூலகமும், அறிவியல் மையமும் அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
- சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கும்போது உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்தால் வழக்குப்பதிவு - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
- தலைமறைவாக உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
- உசேன் போல்ட், எம்.எஸ்.தோனி போல முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடு - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
- 2 ஆண்டுகளாக காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி - கங்குவா படம் அக்டோபர் 10ல் ரிலீஸ்
இந்தியா:
- மக்களவையில் உரையாற்றிய திரௌபதி முர்மு - மணிப்பூர் மற்றும் நீட் கோஷங்களை எழுப்பிய எதிர்க்கட்சியினர்
- உலக அரங்கில் இந்திய பல்கலைக்கழகங்கள் முன்னேற்றம் - பிரதமர் மோடி பாராட்டு
- ஜியோ கட்டண சேவையில் மாற்றம் - ஜூலை 3 முதல் அமலுக்கு வருவதால் பயனாளர்கள் அதிர்ச்சி
- நீட் விவகாரம் - தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்குள் புகுந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்
- டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் ஆலோசனை
- நீட் விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
- மாநிலங்களவை பாஜக தலைவராக சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தேர்வு
- உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி - சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்
- மக்கள் என்ன ஆடு, மாடா? - மும்பை புறநகர் ரயிலில் அலைமோதும் கூட்டம் குறித்து மாநில உயர்நீதிமன்றம் காட்டம்
- நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை மாற்றக்கோரிய சமாஜ்வாதி கட்சி - பாஜக கடும் கண்டனம்
உலகம்:
- பொலிவியாவில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட ராணுவ தளபதி கைது
- ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கையைச் சேர்ந்த 17 பேர் உயிரிழப்பு
- ரஷ்யா - இந்தோனேசியா இடையே மீண்டும் நேரடி விமான சேவை
- நேபாளத்தில் மழை, வெள்ளம் - 14 பேர் உயிரிழப்பு
- ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டது - 70 பேர் காயம்
விளையாட்டு:
- டி20 உலகக் கோப்பை - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
- டி20 உலக்கோப்பையில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா
- டி20 உலகக்கோப்பை போட்டியில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
அரசியல்
தமிழ்நாடு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion