மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு.. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
7 AM Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு கோரிக்கை.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- 2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4, 840 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்.
- 2023-24ல் பத்திரப்பதிவுத் துறை மூலம் ரூ. 18, 825 கோடி வருவாய் கிடைத்துள்ளது - பத்திரப்பதிவுத்துறை தகவல்.
- கால்நடை மருத்துவ பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கு ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு.
- நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
- விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 93 பேர் டிஸ்சார்ஜ்.
- திருவண்ணாமலையில் 12 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 60 காவலர்கள் பணியிட மாற்றம்.
- ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29ல் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
- ஓசூர்: தமிழ்நாடு ஜூனியர் சதுரங்க விளையாட்டு போட்டியில் 240 மாணவ - மாணவியர்கள் பங்கேற்பு.
இந்தியா:
- மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு; பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து.
- நீட் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
- இந்தியாவின் ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச்சு.
- நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.
- ராஜஸ்தான்: மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.
- மேற்கு வங்கத்தில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு - 2 எம்.எல்.ஏக்கள் தர்ணா.
- ஜம்மு - காஷ்மீர்: டோடா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
- மக்களவையில் அவசர நிலை பற்றிய சபாநாயகரின் சர்ச்சை பேச்சுக்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு.
உலகம்:
- ஏடன் வளைகுடாவில் சென்ற சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
- ரஷியாவில் காவல்நிலையம் மீதும் தாக்குதல் - 21 பேர் உயிரிழப்பு.
- வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபக்கற்பத்தில் பதற்றம்.
- சர்வதேச மோதல்களை கையாள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விரிவாக்கம் அவசியம் - இந்தியா.
- இஸ்ரேலின் எய்லாட் நகரின் நடந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் குழு பொறுப்பேற்பு.
- கென்யா நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு.
- ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு.
விளையாட்டு:
- டி20 உலகக் கோப்பை 2024ல் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறுகிறது.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- டி20 தரவரிசை பட்டியல்: சூர்யகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி டிராவிஸ் ஹெட் முதலிடத்திற்கு முன்னேற்றம்.
- டி20 உலகக் கோப்பை 2024ல் முதலாவது அரையிறுதி போட்டியில் தற்போது தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion