மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி.. அரையிறுதி சென்ற ஆப்கானிஸ்தான்..இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
- கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக அதிமுக, பாமக தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
- யானை வழித்தடத்தில் ஈஷா மையம் அமைக்கப்பட்டுள்ளதா? - சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தனிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் துரைமுருகன்
- மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
- ஆவின் நிறுவனத்தை திமுக அரசு அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது - ஓபிஎஸ் கடும் விமர்சனம்
- பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதாக அறிவித்த ஆந்திரா அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
- கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் மரணம் - குஷ்பூ தலைமையிலான 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்த மகளிர் ஆணையம்
- சென்னை விமான நிலையத்தில் ரூ.7.58 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் - சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - மத்திய வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
- குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
- சட்டப்பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த அதிமுக முயற்சிப்பதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு - அவை நடவடிக்கையில் பங்கேற்க ஒருநாள் தடை
இந்தியா:
- மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு - தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்
- மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு - அரசியல் தலைவர்கள் வாழ்த்து
- மக்களவை வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் - இன்று நடைபெறுகிறது
- 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலமைப்பை அழிக்க இந்திரா காந்தி திட்டமிட்டார் - யோகி ஆதித்யநாத் விமர்சனம்
- டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு - திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிபிஐ விசாரணை
உலகம்:
- காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
- உக்ரைன் போருக்கு பின்னால் முதல்முறையாக பிரதமர் மோடி ரஷ்யா பயணம்
- இங்கிலாந்து சிறையில் இருந்து ஜூலியன் அசாஞ்சே விடுதலை
- அதிபர் தேர்தலில் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என ஈரான் தலைவர் அழைப்பு
விளையாட்டு:
- டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்
- டி20 உலக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியால் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது ஆஸ்திரேலியா
- டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
- சென்னையில் நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் போட்டியை இலவசமாக காணலாம் என அறிவிப்பு
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் ஓய்வு அறிவிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion