மேலும் அறிய

Monkey Pox : மீண்டும் ஒரு அச்சுறுத்தல்.. வேகமாக பரவும் குரங்கு அம்மை : எப்படி பரவுகிறது ? அறிகுறிகள், சிகிச்சை என்னென்ன?

இந்தியாவில் தற்போது நான்கு பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் குரங்கு அம்மை : எப்படி பரவுகிறது ? அறிகுறிகள், சிகிச்சை என்னென்ன ?

இந்தியாவில் தற்போது நான்கு பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இல்லாமல்  இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இந்த தொற்று பதிவாகியுள்ளது.

குரங்கு அம்மை என்றால் என்ன?

குரங்கு அம்மை என்பது ஒரு அறிய வகை வைரஸ் தொற்றாகும். இது வரை இந்தியாவில் நான்கு பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள் எனவும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் ஒருவருக்கொருவர் எளிதில் பரவாது, இதனால் பரவலாக பாதிக்கப்படும் ஆபத்து மிகவும் குறைவுதான் என தெரியவந்துள்ளது.

குரங்கு அம்மைக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கிடையாது. பெரியம்மை வைரஸ் போல இதுவும் இருப்பதால் அந்த தடுப்பூசியே இதுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் 80 சதவிதம் தீர்வு கிடைக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குரங்கு அம்மையின் அறிகுறிகள் என்ன?

ஆரம்பக் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி போன்ற அறிகுறிகள் தென்படும். அதன் பின் காய்ச்சல் வந்ததும் தடிப்புகள் ஏற்படுகிறது. முதலில் அது முகத்தில் தோன்றி பின் உடலின் பிற பகுதிகளுக்கு பரவுகிறது. பொதுவாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களுக்கு பரவுகிறது.

அரிப்பு அதிகமாகி அது வலி மிகுந்ததாகிவிடும். அதன்பின் பல்வேறு கட்டங்களாக உருவெடுத்து சிரங்கு உண்டாகும். அதன்பின் அது மறைந்துவிடும். ஆனால் கொப்பளங்கள் தழும்பை ஏற்படுத்தலாம். பொதுவாக இந்த தொற்று 14 - 21 நாட்களில் தானாக சரியாகிவிடும்.

எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இது மரணங்களை உண்டாக்கியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

Monkey Pox : மீண்டும் ஒரு அச்சுறுத்தல்.. வேகமாக பரவும் குரங்கு அம்மை : எப்படி பரவுகிறது ? அறிகுறிகள், சிகிச்சை என்னென்ன?

குரங்கு அம்மைக்கு முறையான சிகிச்சை என்ன?

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், குரங்கு அம்மைக்கு குறிப்பாக எந்த சிகிச்சையும் இல்லை என்று தெரிவிக்கிறது. இருப்பினும் இது பரவுவதை கட்டுப்படுத்தலாம். அதேபோல குரங்கு அம்மைக்கு ஏற்கனவே சந்தையில் அனுமதியளிக்கப்பட்ட மருந்துகள் உள்ளன. சிடோஃபோவிர், ST-246, வேசினியா இம்யூன்க்ளோபுலின் போன்ற மருந்துகள் குரங்கு அம்மை தொற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

குரங்கு அம்மை ஆபத்தானதா?

இந்தியாவில் இதுவரை உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. ஆனால் தெற்கு ஆப்ரிக்காவில் இதனால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலும் இது எளிமையாகவே சரியாகிவிடும். ஆனால் கொப்புளங்கள் தழும்புகளாக மாறலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Monkey Pox : மீண்டும் ஒரு அச்சுறுத்தல்.. வேகமாக பரவும் குரங்கு அம்மை : எப்படி பரவுகிறது ? அறிகுறிகள், சிகிச்சை என்னென்ன?

இந்தியாவில் குரங்கு அம்மை

இந்தியாவில் முதலாவதாக குரங்கு அம்மை பாதிப்பு, ஜூலை 14-ஆம் தேதி கேரளாவின் கொல்லத்தில் பதிவானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த அந்த நபருக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டது. இரண்டாவதாக, துபாயில் இருந்து கேரளத்துக்கு வந்த 31 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு பரிசோதனையில் உறுதியானது. கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் கேரளாவுக்கு வந்த 35 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. மலப்புரத்தை பூர்விகமாகக் கொண்ட அவர், ஜூலை 6-ஆம் தேதி கேரளாவுக்கு வந்ததாகவும், அங்குள்ள மாஞ்சேரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

தற்போது டெல்லியில் ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் என இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட அந்த 31 வயது நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். உலகளவில் இதுவரை 16 ஆயிரம் பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்த தொற்றால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Embed widget