மேலும் அறிய

பிரதமர் மோடி ஆட்சியில் இடதுசாரி தீவிரவாதம் குறைந்துள்ளது: அமித்ஷா

மோடி ஆட்சியில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 70% குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மோடி ஆட்சியில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 70% குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அதேபோல் வடகிழக்கு மாநிலங்களில் ஒட்டுமொத்த பரப்பளவில் 66 சதவீதம் இடங்களில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (Armed Forces (Special Powers) Act, விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தலைநகர் டெல்லியில் நடந்த தேசிய பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனத்தின் துவக்க விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

,பழங்குடியினர் அமைச்சகத்தின் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உள்துறை  அமைச்சர், அமித் ஷா தேசிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனத்தை அவர் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நாட்டில் இடது சாரி தீவிரவாதம் இருந்த மாநிலங்கள் எல்லாமே பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளன. அதனால் அங்கு வளர்ச்சியை ஏற்படுத்த பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். பாதுகாப்பான வடகிழக்கும், பாதுகாப்பான மத்திய இந்தியாவும் சாத்தியமானால் அது பழங்குடியின சமூகத்தின் வளார்ச்சியை உறுதி செய்யும். இதை இலக்காக கொண்டே மோடி அரசு செயல்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களில் 8700 விரும்பத்தகாத வன்முறை செயல்கள் நடந்துள்ளன. இப்போது மோடி ஆட்சியில் இந்த எண்ணிக்கை 1,700 ஆகக் குறைந்துள்ளது. மோடி ஆட்சி அமைந்த பின்னர் வடகிழக்கில் இதுவரை 87 பாதுகாப்பு படைவீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் 304 பாதுகாப்புப் படையினர் இறந்தனர்.
நாட்டில் திட்டக் கமிஷன் இப்போது நிதி ஆயோக் என்ற பெயரில் செயல்படுகிறது. எல்ஐசி, பெல் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்துமே நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்துள்ளன. அது போலவே தேசிய பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனமும் (NTRI National Tribal Research Institute) பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க செயல்களைச் செய்யும். இது ஒரு மைல்கல் என்றார். 

இந்த மையத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

தேசிய பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனமானது பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்கள் (TRIகள்), சிறப்பு மையங்கள் (CoEகள்), NFS இன் ஆராய்ச்சி அறிஞர்களின் திட்டங்களைக் கண்காணிக்கும்.  ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுக்கும். பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் மாநில நலத் துறைகளுக்கு கொள்கை உள்ளீடுகளை வழங்கும்.

பழங்குடியினரின் வாழ்க்கை முறையின் சமூக-பொருளாதார அம்சங்களை மேம்படுத்த அல்லது ஆதரிக்கும் திட்டங்கள், PMAAGYன் தரவுத்தளத்தை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், அமைப்பில் வழிகாட்டுதல்களை வழங்குதல் ஆகியவை இதன் மற்ற செயல்பாடுகளாகும்.

பழங்குடியினர் அருங்காட்சியகங்களை நடத்துதல் மற்றும் இந்தியாவின் வளமான பழங்குடி கலாச்சார பாரம்பரியத்தை ஒரே குடையின் கீழ் காட்சிப்படுத்துதல் ஆகிய பணிகளை கையாளும்.

தலைப்பு செய்திகள்

கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget