‛நவீனக் கல்வி பயனற்றது... நல்ல மனிதர்களை உருவாக்குவதில்லை’ - தலைமை நீதிபதி ரமணா!
ரதிர்ஷ்டவசமாக புதிய நவீனக் கல்விமுறை பயனற்ற சில செயல்பாடுகளில்தான் அதிக கவனம் செலுத்துகிறது.- தலைமை நீதிபதி என்.வி.ரமணா
நவீனக் கல்வி பயனற்றது என்றும் வெறும் படிப்பறிவை மட்டுமே அது சொல்லித் தருகிறது என்றும் நல்ல மனிதர்களை அது உருவாக்குவதில்லை என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்யசாய் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
View this post on Instagram
நிகழ்வில் பேசிய அவர், “துரதிர்ஷ்டவசமாக புதிய நவீனக் கல்விமுறை பயனற்ற சில செயல்பாடுகளில்தான் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால் கல்வியின் நன்னெறி மற்றும் உளவியல் சார்ந்த அம்சங்களைப் பற்றி மாணவர்களுக்குச் சொல்லித்தர முடியாது. அந்த கல்விமுறைதான் அவர்களது குணத்தைக் கட்டமைத்து அவர்களது சமூக அக்கறையையும் கடமை உணர்ச்சியையும் விரிவுபடுத்தும்” எனக் கூறியுள்ளார்.
Leaders/rulers in today’s democracy, before beginning their routine work, should introspect whether they have any bad qualities or not and should deliver fair ruling needed for the welfare of the public: CJI NV Ramana at an event in Anantapuramu, Andhra Pradesh pic.twitter.com/RoWyJc080g
— ANI (@ANI) November 22, 2021
”உண்மையான கல்வி ஒருவரில் நல்ல ஒழுக்கத்தையும், தன்னடக்கம், அறநெறி, சுயநலமின்மை, கருணை, பொறுமை, மன்னிக்கும் குணம், பரஸ்பரம் மரியாதை ஆகியவற்றை வளர்க்கும். அறிவை விசாலமாக்கும். நெருக்கடியான காலக்கட்டத்தில் ஒருவரை தெளிவாக முடிவெடுக்கச் செய்யும்”எனவும் பேசியுள்ளார்.