Meta Subscription: ரைட்டு..! பேஸ்புக், இன்ஸ்டா சந்தா திட்டத்தை விரிவுபடுத்திய மெட்டா - 4 புதிய கட்டண விவரங்கள் என்ன?
Meta Subscription: மெட்டா நிறுவனம் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளுக்கான, சந்தா திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
Meta Subscription: மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளுக்கான, புதிய சந்தா திட்டங்களுக்கான கட்டண விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மெட்டா வெரிஃபைட் சந்தா திட்டங்கள்:
சர்வதேச அளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் சமூக வலைதள ஜாம்பவானான மெட்டா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி வெரிஃபைட் கணக்குகளுக்கான புதிய சந்தா திட்டங்கள் தற்போது இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களிடையே சந்தா முறையை சோதித்த மெட்டா, சோதனைகளின் வெற்றியின் காரணமாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் அதிக அம்சங்கள் மற்றும் ஆதரவுடன் வணிக சலுகைகளை கொண்டு வருவதாகக் கூறியது. இது வெரிஃபைட் பேட்ஜ், சிறந்த கணக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பை வழங்கும் என்று விளக்கமளிக்கப்பட்டது. இந்த சூழலில் தான், திட்டத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நான்கு வகையான சந்தா திட்டங்கள்:
புதிதாக கொண்டு வரப்பட்ட சந்தா திட்டங்களுடன், அந்தந்த செயலிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உறுப்பினர் தொகுப்புகளை வழங்குவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக ஒற்றை சந்தா திட்டத்தை வழங்கிய மெட்டா நிறுவனம், இப்போது நான்கு வகையான திட்டங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் தொடர்பான விலை விவரங்களையும் மெட்டா வெளியிட்டுள்ளது. ஆரம்ப சரிபார்க்கப்பட்ட சந்தா திட்டத்தின் விலை ரூ. 639 அதிகபட்சமாக ரூ.21000 ஆக இருக்குகிறது. இந்த சந்தா திட்டங்களை iOS மற்றும் ஆண்ட்ராய்டு மூலங்களிலிருந்து மட்டுமே வாங்குமாறு இந்திய பயனர்களுக்கு மெட்டா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வெரிஃபைட் பேட்ஜின் நன்மைகள் என்ன?
இந்த வெரிஃபைட் பேட்ஜ் மூலம், அந்தந்த நிறுவனங்கள் தங்கள் வணிகங்களை மேம்படுத்த முடியும் என்று மெட்டா நிறுவனம் கூறுகிறது. சரிபார்க்கப்பட்ட கணக்கு பயனர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் அந்தந்த நிறுவனங்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். சரிபார்க்கப்பட்ட டிக் இல்லாததால் கணக்கு உண்மையானதா? போலி கணக்கா அல்லது ஏதாவதா? என அறியாத பயனர்கள் தவறு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், வெரிஃபைட் டிக் மூலம் அனைத்து சந்தேகங்களையும் போக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மெட்டா வெரிஃபைட் சந்தாதாரர்களுக்கு அந்தந்த திட்டங்களின் தேர்வைப் பொறுத்து ஆதரவு வழங்கப்படும் என்று மெட்டா அறிவித்துள்ளது.
இந்த வெரிஃபைட் சந்தா முறை முதலில் X (டிவிட்டர்) ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. ட்விட்டரை எலோன் மஸ்க் வாங்கிய பிறகு, பெயர் X என மாற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த வெரிஃபைட் சந்தா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மெட்டா நிர்வாகமும் இந்தக் கொள்கையை அமல்படுத்தியது. Meta Verified Business Offer புளூ டிக் வெரிஃபைட் பேட்ஜ் இந்தியாவில் Facebook மற்றும் Instagram இல் தெரியும். வாட்ஸ்அப்பில் பச்சை நிற வெரிஃபைட் பேட்ஜ் வழங்கப்படுகிறது.