18 வயதுக்குட்பட்ட பெண்ணின் முதுகு அல்லது தலையை தடவி கொடுப்பது குற்றமாகாது.. மும்பை உயர்நீதிமன்றம்..
எந்தவித பாலியல் நோக்கமும் இல்லாமல் 18 வயதுக்குட்பட்ட பெண்ணின் முதுகு அல்லது தலையை தடவி கொடுப்பது கன்னியத்தை சீர்குலைப்பதாக இருக்காது மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் குறிப்பிட்டது.
எந்தவித பாலியல் நோக்கமும் இல்லாமல் 18 வயதுக்குட்பட்ட பெண்ணின் முதுகு அல்லது தலையை தடவி கொடுப்பது அவரது கன்னியத்தை எந்த வகையிலும் சீர்குலைப்பதாக இருக்காது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் 28 வயதுடைய நபரின் தண்டனையை ரத்து செய்யும் போது குறிப்பிட்டது.
12 வயது சிறுமிக்கு கன்னியத்தை சீர்குலைத்ததாக இந்த 2012ஆம் ஆண்டில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் வயது 18 ஆகும். பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது முதுகு மற்றும் தலையை தடவிக்கொடுத்தப்படி நன்கு வளர்ந்துவிட்டார் என கூறியதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி பாரதி டாங்ரேவின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் எந்தவித பாலியல் நோக்கத்தோடு அந்த சிறுமியை அணுகவில்லை என்றும் அந்த சிறுமியை ஒரு குழந்தையாக எண்ணி இந்த கூற்றை தெரிவித்ததாகவும் தெரியவந்தது. இந்த விசாரணையில் சிறுமி தரப்பிலும் அந்த நபர் மீது தவறான எண்ணம் இல்லை என்றும் அவர் செய்த செயல் சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் நோக்கத்தோடு அணுகியதற்காக எந்த ஆதரமும் இல்லை என நீதிபதி கூறினார். எந்த ஆதரமும் இல்லாமல் 354 பிரிவின் கீழ் எவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
2012 ஆம் ஆண்டு, சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சில ஆவணங்களை கொடுப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டிற்கு சென்றார். அப்போது அந்த சிறுமியை கண்டு அவர் நன்கு வளர்ந்துள்ளார் என கூறியுள்ளார். இந்த சம்பவம் சிறுமியை சங்கடத்தில் ஆழ்த்த அக்கம் பக்கத்தினரை உதவிக்காக அழைத்துள்ளார். விசாரணை நீதிமன்றத்தில் 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நீதிபதி பாரதி டாங்ரேவின் அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு அவரது தண்டனையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.