நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? 348 Apps-ஐ மத்திய அரசு முடக்கியது ஏன்?
348 மொபைல் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு வெளியே அமைந்துள்ள நிறுவனங்களுக்கு பயனர்களின் தகவல்களை அங்கீகரிக்கப்படாத முறையில் அனுப்பியதற்காக உள்துறை அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட 348 மொபைல் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
The Centre has identified and blocked 348 apps developed by various countries, including #China, for allegedly collecting user information for profiling citizens and transmitting it overseas in an unauthorised manner. https://t.co/OPCk8FNR0D
— Deccan Herald (@DeccanHerald) August 3, 2022
மக்களவையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்த செயலிகளை சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
"உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் அடிப்படையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அந்த 348 மொபைல் செயலிகளை முடக்கியுள்ளது. ஏனெனில் இதுபோன்ற தரவு பரிமாற்றங்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பை மீறுகின்றன" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த 348 செயலிகளை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எப்போது முடக்கியுள்ளது என்பது குறித்த தகவல் இல்லை.
கடந்த மாதம், The Battlegrounds Mobile India செயலியை அரசின் உத்தரவின் பேரில் Google Play Store மற்றும் App Store இலிருந்து நீக்கப்பட்டன. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், பிரபலமான ஆன்லைன் கேமை நீக்க அரசு உத்தரவிட்டதாக கூகுள் உறுதிப்படுத்தியது.
தென் கொரிய கேம் டெவலப்மென்ட் நிறுவனமான பிஜிஎம்ஐ-இன் தரவுப் பகிர்வு குறித்து இந்தியா கவலை தெரிவித்ததாகவும் அதன் பிறகு, ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்றப்பட்டதாக இந்திய அரசு தரப்பில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69ஏ-இன்படி, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட தளங்களை பொது மக்கள் பயன்பாட்டிலிருந்து முடக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இருப்பினும், Skyesports CEO மற்றும் நிறுவனர் சிவ நந்தி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் இந்த தடை தற்காலிகமானது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இந்த செயலி விரைவில் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்