(Source: ECI/ABP News/ABP Majha)
நடு ரோட்டில் சேற்று நீரில் குளியல்... யோகா செய்து நூதன போராட்டம்... இளைஞரின் வைரல் வீடியோ
கேரள சாலைகளில் போத்தோல்கள் நிரம்பி இருப்பதை சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் அம்மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கேரள சாலைகளில் போத்தோல்கள் நிரம்பி இருப்பதை சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் அம்மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
A different way to protest for potholes... pic.twitter.com/tZGqKWUDpi
— Savitha Murthy (@savithamurthy2) August 9, 2022
இவரின் நூதன் போராட்டம் வீடியோவாக இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த கிளிப்பில், வாளி, குவளை, சோப்பு மற்றும் துண்டுடன் மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் நபர் ஒருவர் குளிப்பதைக் காணலாம். அவர் குளிப்பதையும் சாலையில் உள்ள சேற்று நீர் குளத்தில் துணிகளை துவைப்பதையும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் பார்த்து படம்பிடித்தனர்.
நூதன போராட்டத்தில் ஈடுபட்டவரின் பெயர் ஹம்சா போராளி என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை காலை மலப்புரம் மாவட்டத்தில் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
நூதன போராட்டம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் எம்எல்ஏ யு.ஏ.லத்தீப் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு எம்எல்ஏ செல்லும் போது, போத்தோலில் அமர்ந்து கொண்டு போராளி தியானம் செய்து கொண்டிருந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.
சேற்று நீர் நிரம்பியிருக்கும் போத்தோலின் நடுவே போராளி, யோகா செய்து கொண்டிருப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. கேரளாவில் பள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
எர்ணாயுகுளம் மாவட்டம் நெடும்பசேரி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக 52 வயது நபர் ஒருவர் விபத்தில் சிக்கினார். சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மீது மோதினார்.
வழக்கை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட கேரள உயர் நீதிமன்றம், பள்ளங்களை உடனடியாக சரி செய்யுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அடங்கிய ஒரு நீதிபதி கொண்ட அமர்வு, 'மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர்கள் என்ற முறையில், ரோட்டில் பள்ளம் ஏற்பட்டால், அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து, பொறியாளர், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்