Watch Video: 7 பேர், 2 நாய்கள், ஒரு சேவல்..! மூட்டை முடிச்சுகளுடன் இருசக்கர வண்டியில் பயணித்த குடும்பம்..
இரு சக்கர வாகனத்தில் 7 பேர் மூட்டை முடிச்சுகள், நாய், சேவல் என வீட்டை காலி செய்து இடம்பெயரும் வகையில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உலக மக்கள் தொகை 800 கோடியைக் கடந்து உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த மீம்ஸ்கள், கவலை, பகடிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் சமூக வலைதளங்களும் உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன.
நவம்பர் 15ஆம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டிய நிலையில், 90ஸ் கிட்ஸ் இன்னும் சிங்கிளாகவே வலம் வருகின்றனர் என்பது தொடங்கி பல பதிவுகள் மூலம் இணையவாசிகள் கிச்சுகிச்சுமூட்டி சிரிக்க வைத்து வந்தனர்.
இரு சக்கர வாகனமா..? லோடு வாகனமா..?
அந்த வகையில் முன்னதாக வைரலான வீடியோ ஒன்று சிரிப்பு, அதிர்ச்சி, கவலை என அனைத்தையும் அளித்து நெட்டிசன்களின் கவனம் ஈர்த்துள்ளது. ஆண் ஒருவர், 5 குழந்தைகள், ஒரு பெண், இரண்டு நாய்கள், சேவல் மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு தன் இருசக்கர வாகனத்தை லாவகமாக ஓட்டிச் செல்லும் இந்த வீடியோ, பூமியின் நிலையை விவரிக்கும் வகையில் பகிரப்பட்டிருந்தது.
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் எவ்வளவு கடுமையாக்கப்பட்டாலும், விதிமீறல்கள் இன்று வரை பெரும் பிரச்னையாகவும் சர்வ சாதாரணமாகவும் நிகழ்ந்து வருகின்றன.
இத்தகைய சூழலில் ஒரு இரு சக்கர வாகனத்தில் 7 பேர் மூட்டை முடிச்சுகள், நாய், சேவல் என வீட்டை காலி செய்து இடம்பெயரும் வகையில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ये अगर पकड़ा गया, इसको चालान भरने के लिए लोन लेना पड़ेगा। 😅 pic.twitter.com/pkbnD216md
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) November 18, 2022
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியாத நிலையில், நவம்பர் 18ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலாகி, 2 லட்சத்து 41 ஆயிரம் பார்வையாளர்களையும், 10 ஆயிரம் லைக்குகளையும் பெற்று கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இதேபோல் முன்னதாக, ராயல் என்பீல்ட் வண்டியில் உடைந்து போன பாலத்தை ஒரு நபர் ஆபத்தான முறையில் கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஹரிஷ் ராஜ் என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
View this post on Instagram
இந்நிலையில் ராயல் என்பீல்ட் ஓட்டிய நபருக்கு குட்டு வைத்து இது போன்ற ஆபத்தான பயணங்களை ஊக்குவிப்பதைத் தடுக்குமாறு இணையவாசிகள் கமெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.