Complaint Against Myntra | ஆர்டர் பண்ணது Football ஸ்டாக்ஸ்.. வந்தது ப்ரா... ஷாக்காகி அல்லோலப்பட்ட இளைஞர்..
கால்பந்து சாக்ஸ் ஆர்டர் செய்த நபருக்கு தவறுதலாக பெண்கள் உள்ளாடை வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் இ-வர்த்தக முறை மிகவும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் சமீப காலங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது மிகவும் அதிகமாகி உள்ளது. அந்தவகையில் ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் அவ்வப்போது சில பிரச்னைகளும் வாடிக்கையாளர்களுக்கு வருகிறது. அப்படி ஒரு பிரச்னை தற்போது ஒருவருக்கு வந்துள்ளது. அவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு ஒரு பொருள் வந்துள்ளது பெரும் ஏமாற்றம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் ஒருவர் மிந்த்ரா தளத்தில் கால்பந்து விளையாட்டின் போது அணியும் சாடாகிங்ஸ் என்ற சாக்ஸை வகையை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அந்த தளத்தில் இருந்து அவருக்கு வந்த பார்சலை அவர் திறந்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் அவருக்கு பெண்களின் உள்ளாடையான ப்ரா வந்துள்ளது . இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து அந்த மிந்த்ரா தளத்தில் புகாரை பதிவு செய்துள்ளார். ஆனால் தற்போது வரை அதை மாற்றி தர எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Ordered football stockings. Received a triumph bra. @myntra's response? "Sorry, can't replace it".
— Kashyap (@LowKashWala) October 17, 2021
So I'm going to be wearing a 34 CC bra to football games, fellas. Ima call it my sports bra. pic.twitter.com/hVKVwJLWGr
இதற்கு மிந்த்ரா நிறுவனத்தின் கணக்கில் இருந்து ஒரு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், "இந்த தவறுக்கு நாங்கள் வருந்துகிறோம். உங்களுடைய பிரச்னையை விரைவில் சரி செய்துவிட எங்களால் ஆன அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறோம் " எனப் பதிவிட்டுள்ளது. இதுபோன்று ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது வாடிக்கையாளர்கள் பல சிக்கலை சந்தித்து வருவது வாடிக்கையாக மாறி வருகிறது. இதற்கு அந்தந்த இ-வர்த்தக தளங்கள் டெலிவரி வரை அனைத்து நடைமுறைகளையும் உடனடியாக முறைப்படுத்த வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.
இந்தியாவில் தற்போது உள்ள நுகர்வோர் உரிமைகளில் இ-வர்த்தக தளங்களும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு உள்ளது. இதை அனைத்து இ வர்த்தக தளங்களும் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: காசு மேல காசு வந்து.. ரூபாய் நோட்டை இதை வைத்துத்தான் தயாரிக்கிறார்கள்.. தெரியவந்த சர்ப்ரைஸ் தகவல்..