மத்திய அரசுக்கு தொடர் நெருக்கடி... பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க சட்ட முன்வரைவு....மம்தா பானர்ஜி அதிரடி
நாடு முழுவதும் மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே விளங்குகிறார். இச்சூழலில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை முதலமைச்சரே நியமிக்கும் முன்வரைவுக்குமாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
மேற்கு வங்கத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை முதலமைச்சரே நியமிக்கும் முன்வரைவுக்கு இன்று (மே.26) அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது பின்பற்றப்படும் முறைப்படி, மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே விளங்குகிறார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பிற முக்கிய நிர்வாக முடிவுகளுக்கு ஆளுநர்களே பொறுப்பாவர்.
இச்சூழலில், தற்போது மேங்கு வங்கத்தில் இப்பொறுப்பை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியே ஏற்றுள்ளார்.
இந்நிலையில், இது குறித்த மசோதா விரைவில் அம்மாநில சட்டபேரவையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் தேவையும் என்பது முக்கியத் தகவல்.
கடந்த 2010ஆம் ஆண்டு புஞ்சி கமிஷனால் இத்திட்டம் முதன்முதலாக மேற்கு வங்கத்தில் முன்மொழியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இத்திட்டம் குறித்து ஆளுநர் முதலமைச்சர் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், ஆளுநரைப் புறக்கணித்து விட்டு மாநில அரசே சொந்தமாக துணைவேந்தர்களை நியமிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தமிழ்நாட்டிலும் இதேபோல் ஏப்ரல் 25-ஆம் தேதி தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்க வலியுறுத்தப்பட்டு, சித்தா பல்கலைக்கழகத்துக்கு முதல்வரே வேந்தராகும் மசோதா நிறைவேற்றப்பட்டது