பீகார் தேர்தல்: பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசிய காரணங்கள்! ஆச்சரியமூட்டும் வியூகங்கள் !
"பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முக்கிய காரணங்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்"

தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, பரபரப்புக்கு மத்தியில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 243 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெல்லப்பட்டன.
அதில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் சொன்னதுபோலவே, பாஜக மற்றும் நிதிஷ்குமார் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், யாரும் எதிர்பார்க்காத வகையில் 200-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்து ஆச்சரியமளித்துள்ளது.
பாஜக கூட்டணி வெற்றி பெற்றதற்கான காரணம் என்ன ?
பாஜக கூட்டணிக்கு பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கான வெற்றி பெற்றதற்கு சில முக்கிய காரணங்களை முன்வைக்கப்படுகின்றன. அரசியல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் இந்த காரணங்களை முன்வைத்து வருகின்றனர்.
நிதீஷ்குமார் - மோடி
பீகாரைப் பொறுத்தவரை அம்மாநிலத்தின் முகமாக பார்க்கப்படும் நிதீஷ் குமார் முன்னிறுத்தி தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை எதிர்கொண்டது. பாஜகவின் முகமாக பிரதமர் மோடியை முன்னிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது மாநிலத்தில் நிதிஷ்குமார், மத்தியில் பிரதமர் மோடி என்ற ரீதியில் இந்த தேர்தலை அணுகியிருந்தது.
வீண் விமர்சனத்தை தவிர்த்த பாஜக
தனியாக போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் பற்றி, பாஜக கூட்டணியை சார்ந்தவர்கள் எந்த வித விமர்சனத்தையும் முன் வைக்காமல் தேர்தலை சந்தித்தனர். இதனால் பிரசாந்த் கிஷோருக்கு வீண் விளம்பரம் கொடுக்க அக்கட்சி மேல் இடம் விரும்பாமல் இருந்து வந்தது.
தொகுதி பங்கிட்டு சீக்கிரம் முடித்த பாஜக
இந்தியா கூட்டணியில் இருந்த தொகுதி பங்கீடு பிரச்சினை, தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இருந்தது. ஆனால் அவற்றை எவ்வளவு சீக்கிரம் பேசி முடிக்க முடியும் அவ்வளவு சீக்கிரம் பாஜக கூட்டணி முடித்தது.
சமுதாய வாக்குகள்..
சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, அனைத்து தொகுதிகளிலும் பாஜக சார்பில் சமுதாய வாரியாக கணக்கெடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை பாஜக முன்கூட்டியே தெரிவித்திருந்தது.
2020 தேர்தலில் கற்ற பாடம்
கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சிராக் பாஸ்வானார் ஐக்கிய ஜனதா தளத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, அவரது கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்து அவரை கூட்டணியில் இணைத்துக் கொண்டது. இதனால் அவரது செல்வாக்கால் பல தொகுதிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி எளிதாக வெற்றி பெற்றது.
இதே போல் கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில், மகத் மற்றும் ஷாபாத் பகுதிகளில் ராஜ்புத், குஷ்வாக சமுதாயங்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 24 தொகுதிகளில் ரெண்டு தொகுதியில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இம்முறை இரண்டு சமுதாய ஓட்டுகளை ஒருங்கிணைக்க பவன் சிங் மற்றும் உபேந்திரா போன்ற தலைவர்களை பாஜக பயன்படுத்தியதால் அப்பகுதியில் கூடுதல் இடங்களில் இம்முறை வென்று உள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் வார் ரூம் அமைக்கப்பட்டு, அவை மத்திய வார் ரூம் உடன் இணைக்கப்பட்டது. தன்னாடுவார்கள் நியமிக்கப்பட்டு ஓட்டுகள் சிதறாமல் பாஜகவிற்கு பெற்று தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
பெண்களுக்கு பத்தாயிரம்..
பீகாரில் தேர்தலுக்கு முன்னதாகவே ஆளும் கூட்டணி முதலமைச்சர் மகிளா ரோஸ்கர் யோஜனா என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கு 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் இந்த திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இவையெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு காரணமாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.




















